விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Saturday, December 25, 2010

    தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010



    ஜக்குபாய் திரைப்படம் இன்டர்நெட்டில் முழுசாக வெளியானது! 
    ஜனவரி 3: சரத்குமார் ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜக்குபாய்  படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னணி இசை சேர்ப்புக்கு முந்தைய நிலையில்  படம் இருந்தபோது யாரோ இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். 
    இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்மபூஷன் விருது 
    ஜனவரி 25: இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
    குடியரசு தின விழாவையொட்டி பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் 130 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தில்  திரையுலகைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், நாராயணன் வகுல் மற்றும் இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் ஆகியோர்  பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
    கஞ்சா கருப்புசங்கீதா திருமணம் 
    ஜன. 27: கஞ்சா கருப்புசங்கீதா
    நடிகர் 'கஞ்சா' கருப்பு திருமணம் சிவகங்கை அருகே நடந்தது. இதில் ஏராளமான சினிமாதுறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் 'கஞ்சா' கருப்பு ராம், பிதாமகன், தாமிரபரணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை. இவருக்கும், சிவகங்கை அருகே  கட்டாணிபட்டியைச் சேர்ந்த பிசிதெரபிஸ்ட் டாக்டர் சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது.
    தமிழ்ப் பெண்களை இழிவுப்படுத்தி பேசிய நடிகர் ஜெயராம் 
    பிப்ரவரி 6: தமிழ் பெண்களை இழிவாக பேசியதாக நடிகர் ஜெயராம் வீடு தாக்கப்பட்டது. பின்னர் அவர் மன்னிப்பு கேட்டார்.
    கணவர் முத்துக்குமாரை காணவில்லை : நடிகை கனகா போலீசில் புகார் 
    பிப்ரவரி 6: தனது கணவர் முத்துக்குமாரை காணவில்லை என்று நடிகை கனகா போலீசில் புகார் கொடுத்தார்.
    ஆவி அமுதா தன் கணவரை கடத்தி வைத்துள்ளார் என்று நடிகை கனகா பரபரப்பு ஏற்படுத்தினார். 
    அஜீத்குமார் ரசிகர்கள் தனது வீட்டை தாக்கியதாக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் புகார் 
    பிப்ரவரி 18: நடிகர் அஜீத்குமார் ரசிகர்கள் தனது வீட்டை தாக்கியதாக ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
    நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு மோசடி புகார் 
    பிப்ரவரி 2: தன்னை ஏமாற்றி ரூ.7 கோடி மோசடி செய்துவிட்டதாக நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு போலீசில் புகார் அளித்தார்.
    பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவிடம், அவருடன் நிறைய படங்கள் நடித்த சிங்கமுத்து என்பவர் இல்லாத இடங்களுக்கு போலி டாகுமென்ட்ஸ்  தயார் செய்து, ரூ.7 கோடி மோசடி செய்ததாக விருகம்பாக்கம் போலீசில் நடிகர் வடிவேலு புகார் செய்தார்.
    சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா செக்ஸ் லீலை 
    மார்ச் 3: சாமியார் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால்  கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின்  உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தாவும் தலைமறைவானார். ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக  இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு,  இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    டைரக்டர் செல்வராகவன் - நடிகை சோனியா அகர்வால் விவாகரத்து 
    மார்ச் 12: டைரக்டர் செல்வராகவன் - நடிகை சோனியா அகர்வாலுக்கு குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
    காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வலை இயக்குனர் செல்வராகவன் அறிமுகபடுத்தினர். முதலில் நட்பாக பழகி வந்த இவர்கள் பின்பு  காதலித்தனர். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகை சோனியா அகர்வால் இருவருக்கும் 2006ல் திருமணம் நடந்தது.  இதனையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு நடந்த வரும் போது நடிகை ஆண்டரியாவுக்கும் செல்வராகனுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.  இந்நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்றனர்.
    ரம்பா-இந்திரன் திருமணம் 
    ஏப். 8: ரம்பாஇந்திரன் திருமணம்
    சில மாதங்களுக்கு முன், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார். இதனால் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். 
    கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம் ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் நடந்தது. 
    முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு, திமுகவில் இணைந்தார் 
    மே 14: நடிகை குஷ்பு தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.
    முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு, திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்  நடிகை குஷ்பு திமுகவில் இணைந்தார். அப்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்,  பொன்முடி, பரிதி இளம்வழுதி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உட்பட பலர் உடனிருந்தனர்.
    பிரபுதேவா , நயன்தாரா காதல் :
    ஜூன் 22: பிரபு தேவா , நயன்தார காதல் திருமணம் செய்து கொண்டதாக போடோக்களுடன் இணையத்தளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் பரப்பரப்பாக செய்திகள் வெளியாகின. முதல் முறையாக பிரபுதேவா விரைவில் நயன்தாராவை திருமணம் செய்யபோவதாக அறிவித்தார்.
    இலங்கை சென்ற அசினுக்கு கண்டனம்! 
    ஜூலை 12: ரெடி இந்தி பட ஷூட்டிங்கிற்காக இலங்கை சென்ற அசின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் அறிவித்தது.
    தமிழ் சினிமா கூட்டமைப்பின் தடை மீறி இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற நடிகை அசின் அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இலங்கை  தமிழர் விவகாரத்தை ஒட்டி சமீபத்தில் இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தமிழ் திரையுலகம் புறக்கணித்தது. தமிழ் படம்  திரையிடக்கூடாது, நடிகர், நடிகைகள் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. அதை ஏற்று தமிழ் படங்கள்  திரையிடப்படவில்லை. நடிகர், நடிகைகளும் விழாவை புறக்கணித்தனர். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ரெடி’ படம் இந்தியில் தயாராகிறது.  இதில் சல்மான்கான் ஜோடியாக அசின் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. அதில் அசின் பங்கேற்று நடித்து வருகிறார்.
    ‘
    தமிழ் திரையுலக கூட்டமைப்பு இலங்கைக்கு செல்ல தமிழ் நடிகர், நடிகைகளுக்கு தடை விதித்திருக்கிறது. அதை மீறி நீங்கள் இலங்கையில் நடக்கும்  படப்பிடிப்பில் கலந்துகொண்டது எப்படி?’ என்று அசினிடம் கேட்கப்பட்டது, ‘நான் ஒரு நடிகை. ஷூட்டிங் நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்வது  இயக்குனரும், தயாரிப்பாளரும்தான். இதில் என் பங்கு எதுவும் இல்லை. அவர் விரும்பும் இடத்தில் ஷூட்டிங் நடந்ததால் அங்கு சென்றாக வேண்டும்.  அதைத்தான் நான் செய்திருக்கிறேன். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவள். கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் அங்கு போகும்போது நான் அங்கு செல்வதில்  தவறில்லை’ என்றார்.
    அசின் அளித்துள்ள இந்த பேட்டி தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனையடுத்து, அசினின் கருத்துக்கு, தயாரிப்பாளர் சங்கம், நடிகர்  சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட எல்லா அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தது.
    நடிகை மீரா வாசுதேவன் விஷால் விவாகரத்து 
    ஜூலை 25 : நடிகை மீரா வாசுதேவன்  விஷால்  விவாகரத்து பெற்றனர். 
    கணவர் விஷாலை விவாகரத்து செய்த கையோடு அடுத்த காதலில் தீவிரமாகி விட்டார் நடிகை மீரா வாசுதேவன். ஹீரோவுடனான காதல் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது மீரா காதல் கொண்டிருப்பது மலையாளப் பட வில்லன் நடிகருடன். இந்த நிலையில் அடுத்த காதலில் தீவிரமாகி விட்டார் மீரா வாசுதேவன். இந்தக் காதல் அவரது வாழ்க்கையை அழகாக்கி இருக்கிறதாம். இம்முறை மீரா காதல் கொண்டிருப்பது மலையாள வில்லன் நடிகர் ஜான் கொக்கனுடன். 
    ''எந்திரன்'' பாடல் கேசட் வெளியீட்டு விழா 
    ஜூலை 31: 'எந்திரன்' பாடல் கேசட் வெளியீட்டு விழா
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பிரமாண்ட படமான 'எந்திரன்' பாடல் கேசட் வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், கவிஞர் வைரமுத்து உட்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர். 
    கணவரிடமிருந்து விவாகரத்து கேட்ட சுகன்யா 
    ஆகஸ்ட் 3: கணவரிடமிருந்து விவாகரத்து கேட்ட சுகன்யா
    கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் சுகன்யா தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை வித¤த்தது.
    ரஜினியின் 'எந்திரன்' வெளியானது.
    அக்டோபர் 1: ஒட்டுமொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பாத்த ரஜினியின் எந்திரன் திரைப்படம் வெளியானது. கலாநிதி மாறன் தயாரிப்பில் சங்கர் இயக்கி இருந்தார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து இருந்தார் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் இந்திய அளவில் மாபெரும் சாதனை படைத்து இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது. 
    நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மரணம் 
    அக். 9 : நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 
    நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மன்னார்குடியில் மாரடைப்பால் மரணமடைந்தார். 
    சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும் திட்டம் 
    ஆகஸ்ட் 22: சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும் திட்டம்
    சென்னையை அடுத்த பையனூரில் சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    த்ரிஷாவுக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு 
    ஆகஸ்ட் 24: த்ரிஷாவுக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு
    ஆந்திராவில் பிடிபட்ட போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை த்ரிஷா மறுப்பு தெரிவித்தார்.
    பிரகாஷ்ராஜ்போனிவர்மா திருமணம் 

    ஆக. 24: நடிகர் பிரகாஷ்ராஜ்போனிவர்மா திருமணம்
    பிரகாஷ் ராஜ்  போனிவர்மா திருமணம் மும்பையில் நடந்தது. பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வந்தார் இந்தி சினிமாவை சேர்ந்த போனிவர்மா. இவர் பஞ்சாபை சேர்ந்தவர். அப்போது அவருக்கும் பிரகாஷ்ராஜ்க்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறியது. போனி வர்மா ஏற்கனவே விவாகரத்து ஆனவர். இந்த காதலையடுத்து மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்தார் பிரகாஷ் ராஜ். இதையடுத்து போனிவர்மா- பிரகாஷ் ராஜ் திருமணம் 24-ம் தேதி நடக்கும் என அறிவித்திருந்தனர். அதன்படி, மும்பை மலாடில் உள்ள ஸ்போர்ட்ஸ் சென்டரில் இவர்கள் திருமணம் பஞ்சாபி முறைப்படி காலை நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். 
    சவுந்தர்யா ரஜினிகாந்த்அஸ்வின் திருமணம் 
    செப். 3: சவுந்தர்யா ரஜினிகாந்த்அஸ்வின் திருமணம்
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா  அஸ்வின் திருமணம் சென்னையில் நடந்தது. அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும் சென்னை தொழிலதிபர் ஆர்.ராம்குமார்  ஹேமா தம்பதியின் மகன் அஸ்வினுக்கும் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதற்காக மணமேடை பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தங்க நிற முலாம் பூசப்பட்ட குடை வடிவில் மணமேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் தலையில் மராட்டிய பாரம்பரிய தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாடும் தலைப்பாகை அணிந்திருந்தார்.
    நடிகர் முரளி மரணம் 
    செப். 8 : முரளி மரணம்
    பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. அன்று (செப். 8) காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். முரளியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் திரைப்பட உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. முரளியின் மறைவிற்கு தமிழ் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
    பாடகி சொர்ணலதா மரணம் 
    செப். 12 : பாடகி சொர்ணலதா மரணம்
    உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி சொர்ணலதா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
    சினேகாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் 
    செப்டம்பர்  16: ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக ராகவேந்திரா என்பவர் மீது தொடர்ந்த வழக்கில் நடிகை சினேகா சைதை கோர்ட்டில் ஆஜராகி, கண்ணீர் மல்க சாட்சி அளித்தார்.
    இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மரணம்! 
    செப். 30 : இசை அமைப்பாளர் சந்திரபோஸ்
    உடல் நலம் பாதிக்கப்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சினிமா இசை அமைப்பாளர் சந்திரபோஸ் மரணம் அடைந்தார். சென்னை, மயிலாப்பூர் கபாலி தோட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரபோஸ் (60). இவர் தமிழ், தெலுங்கு, உட்பட 120க்கும் மேற்பட்ட சினிமா படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    காவ்யா மாதவன் விவாகரத்து 
    அக்டோபர் 22: கணவர் நிஷால் சந்திரனிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் காவ்யா மாதவன்.
    பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கும், திருவனந்தபுரத்தை சேர்ந்த நிஷால் சந்திராவுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். 

    வில்லன் வேலு தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துவதாக நாயகி பாக்யாஞ்சலி புகார் 
    அக்டோபர் 30: உன்னையே காதலிப்பேன் பட வில்லன் வேலு தன்னை திருமணம் செய்ய வற்புறுத்துவதாக போல¦சில் புகார் செய்தார் அப்பட நாயகி பாக்யாஞ்சலி.
    முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் எனது கணவர் : குட்டி ராதிகா 
    நவம்பர் 21: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் எனது கணவர். எங்களுக்கு குழந்தையும் உள்ளதுÕ என ஒரு பேட்டியில் பரபரப்பாக தெரிவித்தார் குட்டி ராதிகா.
    கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்தது உண்மைதான் என்றும் ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்றும் குட்டி ராதிகா கூறியுள்ளார். தமிழில் ‘இயற்கை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. இதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்த இவர், கன்னடத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான குமாரசாமியுடன் குட்டி ராதிகாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதை இருவருமே மறுத்து வந்தனர். இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் ராதிகா. தற்போது 4 வருடங்களுக்கு பிறகு தனது பெண் குழந்தையுடன் குட்டி ராதிகா பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். கன்னட நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், குமாரசாமியின் பெயரை குறிப்பிடாமல், அவரை திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.
    நடிகர் விஜயகுமார் மீது மகள் வனிதா பரப்பரப்பான குற்றச்சாட்டு
    நவம்பர் 23 :நடிகர் விஜயகுமார் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தால், அவரை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா ஆவேசமாக கூறினார். .
    நடிகர் அரவிந்த்சாமி விவாகரத்து 
    டிசம்பர் 10: நடிகர் அரவிந்த்சாமிகாயத்ரிக்கு குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது. 
    மணிரத்னம் இயக்கிய தளபதி, ரோஜா, ராஜிவ் மேனன் இயக்கிய மின்சார கனவு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அரவிந்த்சாமி. இவருக்கும் சென்னையை சேர்ந்த காயத்ரிக்கும் 1994ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமிகாயத்ரிக்கு குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது. 
    விஜய் அரசியல் பிரவேசம்  
    டிசம்பர் 11: நடிகர் விஜய் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளார். புதிய கட்சி தொடங்கும்போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என விஜய் ரசிகர் மன்றத்தினர் விஜய்யை வலியுறுத்தியுள்ளனர். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

    இதையடுத்து அவர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று இரண்டுமுறை எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் விஜய்யோ அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரோ வரவில்லை.

    இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து விஜய்க்கு தொழில் ரீதியாக கொடுக்கப்பட்டு வரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவருக்கு அனைத்து வழிகளிலும் உதவ தான் தயாராக இருப்பதாக அப்போது ஜெயலலிதா உறுதியளித்தார்.


    Posted by விழியே பேசு... at 10:20 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா

    1 comment:

    1. Philosophy PrabhakaranDecember 26, 2010 at 5:33 AM

      விரிவா விளக்கமா எழுதியிருக்கீங்க.... சூப்பர்... பதிவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக வெளியிட்டிருக்கலாம்...

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ▼  2010 (406)
    • ▼  December (288)
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் இரண்டு
      • நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை!- ர...
      • பரபரப்பு வீடியோ காட்சிகள்: நடிகை ரஞ்சிதா விளக்கம்!
      • களவாணி கல்யாணம்... பெற்றோரை சமாதானப்படுத்திய விமல்!
      • இசையுலகிற்கு தற்காலிக டாட்டா -ரஹ்மான் திடீர் முடிவு
      • 1000 வெடிகுண்டு லாரிகள் ஊடுறுவல்-தீவிரவாதிகள் சதி-...
      • 2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
      • ஓரங்கட்டப்பட்ட ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
      • காலை வாரி விடாதீர்கள், ப்ளீஸ்-ஜெயலலிதா கெஞ்சல்
      • செல்வராகவன் படத்திலிருந்து விலகியது ஏன்?
      • விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்
      • வடிவேலு மகனை ஹீரோவாக ஆக்க செலவு செய்த நான்கு லட்சம்
      • 2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
      • வனிதா விவகாரம் இன்று குடும்ப நல கோர்ட்டில் நடந்தத...
      • சித்து +2 வீடியோ பாடல்கள்
      • அஜித்தின 51வது படம் 'பில்லா 2' புதிய தகவல்
      • 2010 -ல் தமிழகம் ஒரு பார்வை -பாகம் ஒன்று
      • "வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
      • விஜய்- சீமான் இணைந்து நடிக்கும் 'சட்டம் என்ன செய்ய...
      • இயக்குநர் பாலசந்தருக்கு சர்வதேச ஏ.என்.ஆர்., விருது
      • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி பல்டி
      • நண்பேன்டா... உதயநிதி ஜோடி முடிவானது
      • ' ஆமாம் வானம் பட இயக்குனரை காதலிக்கிறேன்' - அனுஷ்கா
      • நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்த...
      • வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
      • நான் நிரபராதி நான் நிரபராதி நம்புங்கப்பா... -நித்...
      • பிரபுதேவா - ரமலத் திரைமறைவு பேரத்தில் நடந்தது என்ன?
      • விண்டோஸ் வேகமாக இயங்க
      • இப்படியும் ஒரு தயாரிப்பாளரா....?
      • ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் தோல்வி; இங்கிலாந்து ஆஷஸ் கோப...
      • வனிதா அரசியலில் குதிக்கிறார்
      • எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?
      • நீரா ராடியா சொல்படி அம்பானிக்கு சாதமாய் தீர்ப்பளித...
      • விஜயின் பரிதாப நிலை காவலனுக்கு கிடைத்தது 70 தியேட்...
      • தமன்னாவுக்கு மவுசு குறைந்தது
      • வனிதாவுக்கு பயந்து எங்கும் ஓடி ஒழியவில்லை -அருண் வ...
      • விக்ரம் அமலா பால் இடையே காதல் ....?
      • ஜூலையில் பிரபுதேவா-நயன் திருமணம்
      • நித்தியானந்தா கோவில் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம்
      • ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல்...
      • காவலனை வாங்கியது பிரபல டிவி
      • வனிதா-விஜயகுமார் அடிதடி காட்சியின் வீடியோ
      • விண்டோஸ் 7 அற்புத வசதிகள்
      • குழந்தையை கடத்தியதாக விஜயகுமார் மீது வழக்கு -வனிதா
      • 'மன்மதன் அம்பு' நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பாடலின்...
      • மன்மதன் அம்பு வீடியோ பாடல்
      • விக்கிலீக்ஸின் அடுத்த இலக்கு உலக பொருளாதாரமே ஆட்டம...
      • நடிகை ரம்பாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
      • சிம்புவின் வானம் ரிலீஸ் தியதி மாறியது
      • பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ர...
      • அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்-அ...
      • விஜயகுமாருடன் மோதிய வனிதா-விமான நிலையத்தில் அடிதடி
      • சென்னையில் இருக்கும் அருண் விஜய்யை கைது செய்யுங்கள...
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம் -வீடியோ
      • இயக்குநர் மிஷ்கின் மனநேயாளியா..?
      • படமாகிறது மும்பை தாக்குதல் சம்பவம்!
      • ப்ளாங்க் செக்கொடுத்தும் சுயசரிதை எழுத மறுத்த ஐஸ்வர...
      • இந்தியா 2010 - இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
      • கோ படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்களின் பட்...
      • நீரா ராடியா குறித்த பல ரகசியங்கள் வெளியானது...
      • மீண்டும் ரீலிஸ் ஆகிறது தா படம்!
      • ரஜினியின் அடுத்தபடம் பெயர் 'ஜோகய்யா'
      • சர்ச்சையை கிளப்பும் ராணி, வித்யா முத்தம்
      • தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
      • சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இ...
      • கலைஞர் செய்வது அனைத்தும் அயோக்கியத்தனம் - சீமான் (...
      • காங்கிரசுக்கு திமுக இறுதி எச்சரிக்கை ....?
      • விண்டோஸ்-7 தீர்வுகள்
      • ஜெ.வுடன் நெருங்குகிறார் நமீதா!
      • " விஜயகாந்த், 2011ல் தமிழக முதல்வராவார்," புது விள...
      • லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழர் இலங்கைக்கு நாடு...
      • அமலா பால் பந்தா ....
      • திருநங்கை கல்கி நாயகியாக நடிக்கும் 'நர்த்தகி'
      • மலையாளத்திலும் கலக்கப்போகிறார் வடிவேலு
      • சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர துடிக்கும் திரிஷா.
      • தயாநிதி மாறன் செய்தது சரியென்றால் ராசா செய்ததும் ச...
      • மங்காத்தா புதிய தகவல்
      • பல வசதிகளுடன் கூடிய புதிய நோட்பேட்
      • தமிழ் திரையுலகின் முக்கிய நிகழ்வுகள் 2010
      • இயேசு பிறந்த பெத்லகேமில் வரலாறு காணாத கூட்டம்
      • மன்மதன் அம்பு கமல் சிறப்பு பேட்டி - வீடியோ
      • சல்மான் கான் - அசின் ரகசிய திருமணம்...!
      • நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? புதிய சர்ச்சை
      • எந்நேரமும் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம் உச்சகட்ட ...
      • 'ஸ்பெக்ட்ரம்' ராசாவிடம் 9 மணி நேரம் விசாரணை... இன்...
      • சிறந்த பிரவுசர் தொகுப்பு எது?
      • கிறிஸ்மஸ் விழா ...
      • இயக்குனராகும் கமல் மகள்!
      • ராசாவிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ விசாரணை ...
      • டாஸ்மாக் கடையிலும் கருணாநிதி படம் வைக்க வேண்டும் -...
      • ஐ.நா நிபுணர் குழு இலங்கைவந்தால் நாடுதிரும்ப முடியா...
      • வெங்காயம் வாங்க வங்கிக் கடன் கேட்ட முதல்வரின் மனைவி!
      • இத்தாலியராகவே இருக்கும் சோனியா காந்தி - விக்கிலீக்...
      • அஜித் ரசிகர் மன்ற கலைப்பு மிரட்டல்! பின்னணி இதோ
      • காங்கிரஸ் கட்சியில் சேர ஆசைப்படும் கவர்ச்சி நடிகை!
      • இயக்குநர் செல்வராகவனின் புதிய காதல்
      • சிறந்த படமாக அங்காடித்தெரு தேர்ந்தெடுக்கப்பட்டது.
      • கமல்ஹாசன் தலைமையில் நான்கு பட வெற்றி விழா
      • சந்திரமுகி இரண்டாம் பாகம்... நடிக்க ரஜினி மறுப்பு!
      • மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.