இறந்தபின்பும் வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். "அவர் இப்போதுதான் உணர்கிறேன்" என்று உருகி உருகி பேசுகிறார் சீமான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களையும் வியக்க வைத்தவர் அவர். திரையுலகில் சாகா வரம் பெற்ற ஒரு மனிதரை என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் கொச்சை படுத்தியிருக்கிறார் வைரமுத்து. சற்று தாமதமாகவே இந்த செய்தி வெளியே எட்டியிருக்கிறது. இதனால் கொதித்துப் போயிருக்கிறார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.
நடிகர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்பாவம் படத்தின் 25 வது வருட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பாண்டியராஜன் கைகளை நடிகர் கரண் முத்தமிட்டார். இது எம்ஜிஆர் முத்தமிட்ட கை. அதனால்தான் நானும் முத்தமிட்டேன் என்றார் அவர்
பின்னாலேயே பேச வந்தார் வைரமுத்து. அப்போது அவர் பேசியதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 1965ல் எங்கள் ஊருக்கு மக்கள் திலகம் வந்தார். அதில் சரியான கூட்டத்தில் வேட்டி, சட்டை கிழிய ஒருவர் முண்டியடித்துக் சென்று எம்ஜிஆரை தொட்டுவிட்டு வந்தார். அவரிடம், ஏன் இப்படி? என்றேன். அதற்கு அவர், அந்த கால முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு அந்த நடிகையை எம்ஜிஆர் தொட்டார். நான் எம்ஜிஆரை தொட்டேன். அது அந்த நடிகையையே தொட்ட மாதிரி என்றார் மகிழ்ந்து போய். அதுபோல இங்கு பாண்டியராஜனை தொடுவது எம்ஜிஆரை தொடுவது போல என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு வேறு என்னென்ன எதிர்ப்புகளை தூண்டிவிடுமோ, இனிமேல்தான் தெரியும்!
வைரமுத்துவின் பேச்சு கண்டிக்கத்தக்கது...
ReplyDeleteWhere is anything bad about MGR in this speech of Vairamuthu?
ReplyDelete