Thursday, December 30, 2010
"வனிதாவிடம் குழந்தையை ஒப்படைக்க மாட்டேன்..." - ஆகாஷ்
நடிகை வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரியை உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அவரிடம் ஒப்படைக்க முடியாது என்றும், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாகவும் நடிகர் ஆகாஷ் கூறியுள்ளார்.
நடிகை வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் இடையே விவாகரத்து கொடுக்கப்பட்ட வழக்கில் மகன் விஜய் ஸ்ரீஹரி ஆகாஷிடமும், மகள் ஜோவிகா வனிதாவிடமும் இருக்கவேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் ஆகாஷ் மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் ஹைதராபாத் சென்று விட்டார். 2008-ம் ஆண்டு ஆகாஷ் வசம் இருக்கும் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி செகந்திராபாத் நீதிமன்றத்தில் வனிதா வழக்கு தொடர்ந்தார். அதன் படி விஜய் ஸ்ரீஹரி அவரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே வனிதாவுக்கும், விஜயகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில் விஜய் ஸ்ரீஹரியை ஆகாஷ் அழைத்துச்சென்றார்.
இது தொடர்பாக வனிதா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், யாரிடம் இருக்க வேண்டும் என்பதை குடும்ப நல நீதிமன்றத்தில் முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே நடிகர் ஆகாஷ் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் வனிதா வசம் இருக்கும் மகன் விஜய் ஸ்ரீஹரியை தன்னிடம் சட்டப் பூர்வமாக ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மீனாட்சி சுந்தரம், நடிகை வனிதா இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டு இருந்தார்.
அதன்படி வனிதா இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார். இதேபோல் ஆகாஷ், விஜய் ஸ்ரீஹரியுடன் ஆஜரானார்.
அப்போது வனிதா பதில் மனுதாக்கல் செய்தார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 5-ந்தேதிக்கு பின்னர் தள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டார்.
இதற்கு ஆகாஷ் எதிர்ப்பு தெரிவித்தார். விஜய் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல விரும்ப வில்லை என்றும், வழக்கை முன்னதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் நீதிபதியிடம் வனிதா கெஞ்சி கேட்டுக் கொண்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி 6-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய போவதாக ஆகாஷ் தரப்பு வக்கீல் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
Labels:
செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDelete