Monday, December 27, 2010
சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இல்லை
திரைக்கதை எழுதுபவர்களுக்கு நல்ல சம்பளம் தரப்படுபவதே இல்லை என்கிறார், இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று புகழப்படும் இயக்குநர் கே பாக்யராஜ்.
எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் தொடர்ந்து 11 வெள்ளிவிழாப் படங்களைத் தந்த ஒரே இயக்குநர் கே பாக்யராஜ். இந்தப் படங்கள் அனைத்துமே இந்தியிலும்் ரீமேக் செய்யப்பட்டு வசூலைக் குவித்தவை. இன்றுவரை அவரது சாதனையை யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை.
திரைக்கதை எழுதுவதில் அவருக்கு நிகரில்லை என பாலிவுட் ஜாம்பவான்களே புகழ்ந்துள்ளனர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 'படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் திரைக்கதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை', என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "சினிமாவில் இன்று காதல், காதல் தோல்வி தவிர வேறும் இல்லை. காரணம், இளைஞர்கள் அவர்களின் சொந்தக் கதையை மட்டும் படமாக எடுப்பதுதான். இதனால்தான் சினிமாவில் ஒரு முதிர்ச்சியற்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் நல்ல எழுத்தாளர்களால் இந்த நிலையை மாற்றிவிட முடியும். சிறந்த திரைக்கதையை அவர்களால் உருவாக்கித் தர முடியும். ஆனால் அதற்கு நல்ல சம்பளம் தரவேண்டும். ஒரு இயக்குநர்களுக்கு நிகராக திரைக்கதை ஆசிரியர்களுக்கும் சம்பளம் தர வேண்டும்", என்றார்
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment