Friday, December 31, 2010
2010ல் உதிர்ந்த திரை மலர்கள்!
2010ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு பல சோகங்களைக் கொடுத்துச் சென்றாக முடிந்துள்ளது. அருமையான பல கலைஞர்களை மரணத்திற்குக் காவு கொடுத்து பரிதவித்து நின்றது தமிழ் சினிமா.
தனது தேனினும் இனிய குரலால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை ரசிகர்களை லயிக்க வைத்த பாடகி சொர்ணலதா ஆஸ்துமா காரணமாக செப்டம்பர் 12ம் தேதி சென்னையில் மரணமடைந்தார்.
இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரது இசையில் இவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
பூவிலங்கு படம் மூலம் ரசிகர்களின் மனதில் புகுந்து இதயமே படம் மூலம் ரசிகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் முரளி இந்த ஆண்டில்தான் மறைந்தார். செப்டம்பர் 8ம் தேதி இவர் மரணமடைந்தார் என்ற செய்தி வெளியானபோது யாராலுமே அதை நம்ப முடியவில்லை.
சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என்ற ரஜினிகாந்த் ரசிகர்களின் சூப்பர் ஹிட் மந்திரப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் செப்டம்பர் 30ம் தேதி உயிர் நீத்தார்.
நகைச்சுவைச் செல்வர் என்று அன்புடன் அழைக்கப்பட்ட, நகைச்சுவையில் தனி ஸ்டைலை உருவாக்கிய நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் அக்டோபர் 9ம் தேதி மரணமடைந்தார். திரை நடிகராக வலம் வந்து ரசிகர்களைக் கொள்ளை கொண்ட சந்திரன், கடைசிக்காலத்தில் அதிமுக மேடைகளை தனது அனல் பறக்கும் பேச்சால் அலங்கரித்தவர் ஆவார்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment