Tuesday, December 28, 2010
பணம் கொடுத்து சரிகட்டிய பிரபுதேவா விவாகரத்துக்கு ரம்லத்தும் சம்மதம்
பிரபுதேவாவும் அவர் மனைவி ரம்லத்தும் ஒரு மனதாக விவாகரத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
இன்று சென்னை குடும்ப நல கோர்ட்டில் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக் கொள்வதாக மனு தாக்கல் செய்தனர்.
பிரபு தேவாவும் ரம்லத்தும் 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தனர். பிரபுதேவாவின் பெற்றோர் இந்த திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திரையுலகின் முக்கியப் புள்ளிகள் ஆதரவுடன் இந்த திருமணம் நடந்தது.
ஆனாலும் தன் மனைவி, குழந்தைகள் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தார் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் தனக்கு திருமணமே ஆகவில்லை என்றும் பிரம்மச்சாரி என்றும் ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மனைவி ரம்லத் மற்றும் அவருக்குப் பிறந்த மூன்று குழந்தைகள் குறித்து ஆனந்த விகடன் பேட்டியில் ஒப்புக் கொண்டார்.
இந்த பேட்டி வெளியான சில மாதங்களில் பிரபு தேவாவின் மூத்த மகன் கேன்சரில் இறந்தார்.
அப்போது வில்லு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பிரபுதேவா. விஜய் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகி. இந்த படத்தில் பணியாற்றும்போது நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்பு காட்டினார் ரம்லத்.
ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வருவதையே பிரபு தேவா நிறுத்திக் கொண்டார். நயன்தாராவுடன் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார். அதற்கு வசதியாக புதிய பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார் நயன்.ய
இந்த நிலையில், நயன்தாராவை திருமணம் செய்து கொள்வேன் என்று பகிரங்கமாக பேட்டியளித்தார் பிரபுதேவா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி உயிருடன் இருக்கும்போதே, இரண்டாம் திருமணம் பற்றி பேட்டி தந்தது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
கொதித்தெழுந்த ரம்லத் நீதிமன்றத்துக்குப் போனார். பிரபு தேவா - நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறு என்றும், மீண்டும் கணவர் தன்னுடன் வாழ வழி செய்யுமாறும் மனு செய்தார். இன்னொரு மனுவில், நயன்தாரா - பிரபுதேவா சேர்ந்து சுற்றக்கூடாது, பேட்டிகள் தரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கில் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டன பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும். ஆனால் இருவரும் எந்த சம்மனையும் வாங்கவில்லை. இரண்டு முறை மனுக்கள் விசாரணைக்கு வந்தபோதும், அதுபற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
நீதிமன்றம் இவர்களுக்கு மூன்றாவது சம்மன் அனுப்ப உத்தரவிட்டு அமைதியாகிவிட, ரம்லத்துடன் செட்டில்மெண்ட் பேச ஆரம்பித்தது பிரபுதேவா தரப்பு. ரம்லத்தை கழட்டிவிடுவதில் பிரபு தேவா குடும்பத்தினரும் மிக ஆர்வமாக இருந்ததனர். அவர்கள் பிரபு தேவா - நயன்தாராவை முன்பே கணவன் மனைவியாக அங்கீகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர் பிரபுதேவாவும் ரம்லத்தும். வழக்கின் புதிய திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிந்துபோவதாக மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விரைவில் விசாரணையைத் தொடங்க உள்ளது. பரஸ்பர விவாகரத்து என்பதால், சீக்கிரமே இருவரும் விவாகரத்து பெற்றுவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், இத்தனை நாளாக தொடர்ந்த பிரபுதேவா - ரம்லத் - நயன்தாரா குடும்ப விவகாரம் ஒரு முடிவுக்கு வருகிறது. விவாகரத்து பெற்ற கையோடு, நயன்தாராவை திருமணம் செய்கிறார் பிரபுதேவா.
இந்த விவாகரத்துக்காக, ரம்லத்துக்கு பெரும் தொகையை செட்டில்மெண்டாக தர பிரபு தேவாவும் நயன்தாராவும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் அதுபற்றிய விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர் இருதரப்பிலும்
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment