நித்யானந்தா தியான பீடம் என்ற பெயரில் நித்யானந்தா சாமி ஆசிரமம் நடத்தி வருகிறார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அவருக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். அமெரிக்காவில் “லைப் பிளசன்ட் பவுண்டேஷன்” என்ற பெயரிலும் தியான பீடத்தை அவர் நடத்தி வருகிறார். கர்நாடகா மாநிலத்தில் நித்யானந்தாவின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நித்யானந்தா சாமி-நடிகை ரஞ்சிதாவுடன் இருக்கும் படுக்கை அறை காட்சி டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. இருவரும் ஒன்றாக படுக்கையில் அறையில் இருந்த அந்த ஆபாச காட்சி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் சேலத்தை சேர்ந்த நித்யானந்தாவின் சீடர் லெனின்கருப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோ கேட்டுடன் புகார் கொடுத்தார். நித்யானந்தா பீடத்திற்கு வரும் பல பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளார். ஆண்களுடனும் ஹேமோ செக்சில் ஈடுபட்டு வருகிறார். காவி உடையில் மக்களை ஏமாற்றி வருவதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து சென்னை போலீசார் நித்யானந்தா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் நித்யானந்தா ஆசிரம ஆபாச சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நடந்ததால் வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது.நித்யானந்தா மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்து வருகிறார். வீடியோ படம் சித்தரிக்கப்பட்டது. உண்மையானது அல்ல என்று பெங்களூர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் நித்யானந்தா தொடர்ந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு நேற்று ரஞ்சிதா பெங்களூர் கோர்ட்டுக்கு நேரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று மாலை 3 மணிக்கு பெங்களூர் ராமநகர் கோர்ட்டுக்கு அவர் தனது வக்கீல்களுடன் வந்தார். ரஞ்சிதா சார்பில் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன், ஆரத்தி ராவ், ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச படத்தை வெளியிட்டதன் மூலம் அவமானம் ஏற்படுத்தியதாகவும் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
நடிகை ரஞ்சிதாவின் மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு மனு மீதான விசாரணை வருகிற ஜனவரி 29-ந் தேதி நடைபெறும். அன்று மனுதாரர் (ரஞ்சிதா) கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும் என்று உத்தரவிட்டார். இதேபோல பிடுதி ஆசிரமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் சீடர் சார்பிலும், லெனின் கருப்பனுக்கு எதிராக ராமநகர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவில் லெனின் கருப்பன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனுவும் நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது
மேலும், நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தாவுடன் வீடியோ காட்சி வெளியான பிறகு தாம் எந்த ஏட்டுக்கும் பேட்டி தரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தமது பெயரில் வெளியான பேட்டிகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் கடந்த மார்ச் 2 ல் வீடியோ வெளியானவுடன் தாம் அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் ரஞ்சிதா தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது கர்நாடகா போலீசில் புகார் அளிக்கப் போவதாகவும் நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment