வரவர தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் இருந்து சிங்களவர்களும் வீரவசனமும் அறிக்கைகளும் விட ஆரம்பித்து விட்டர்கள் .ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவினர் இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்கக் கூடாது மீறி வைத்தால் அவர்கள் நாடுதிரும்ப மாட்டார்கள் என எச்சரித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்,
பான் கீ மூனுக்கு எதிராக தீர்க்கமான முடிவுகளை எடுத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் இது உண்மையில் நகைசுவையான அறிக்கையும் நகைசுவையான பேச்சாகவும் உள்ளது.
இது தொடர்பாக குணதாஸ அமரசேகர தெரிவித்ததாவது: இலங்கையில் போர்க் குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லையாம்
தற்போது உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து சகல இன மக்களும் சமாதானத்துடன் ஒரு அரசாங்கத்தின் கீழ் வாழ்கின்றனரம். இவருக்கு நாட்டில் நடப்பது எதுவும் தெரியாது போல.
விசார ணைக் குழு அமைத்து அநாவசிய மான பிரச்சினைகளை தோற்றுவிக்க ஐ.நா. முற்படுகின்றது. பான் கீ மூனின் நிபுணர் குழு எக் காரணம் கொண்டும் இலங்கைக்கு வரக்கூடாது.
இப்பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஐ.நா.குழு இலங்கை வருவது எமக்கு உதவி ஒத்தாசைகள் வழங்க அல்ல எமது இராணுவத்தை பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தூக்கிலிடப்படுவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment