Wednesday, December 29, 2010
ரம்லத் - பிரபு தேவாவின் ரூ 30 கோடி விவாகரத்து டீல் விவரம்
கணவர் பிரபு தேவாவிடமிருந்து பரஸ்பர விவாகரத்து பெற ரூ 30 கோடிக்கு ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்களை நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார்.
நயன்தாரா விவகாரத்தால் பிரிந்து நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரபுதேவாவும் ரம்லத்தும் நேற்று குடும்ப நல நீதிமன்றத்துக்கு திடீரென வந்து, தாங்கள் இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருகிறோம் என்று மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"பெரியவர்கள் கூறிய அறிவுரையின்படி இருவரும் மனமுவந்து இந்த மனுவை தாக்கல் செய்கிறோம். இருவரும் மனமுவந்து விவாகரத்து கோருவதால் ரம்லத், பிரபுதேவா இடையே சொத்து பிரிவினைக்கு சம்மதிக்கப்படுகிறது.
அதன்படி, ரம்லத்துக்கு 2 இனோவா கார்கள், அண்ணா நகரில் உள்ள 3440 சதுர அடி நிலம், கோயம்பேட்டில் வீட்டுடன் சேர்த்து 1000 சதுர அடி நிலம் ஆகியவற்றை விற்பனை ஒப்பந்தம் செய்து தர வேண்டும்.
மேலும், ரம்லத்துக்கு ரூ 5 லட்சத்தை பிப்ரவரி மாத முடிவுக்குள்ளும், மேலும் ரூ 5 லட்சத்தை விவாகரத்து கிடைக்கும் நேரத்திலும் தர வேண்டும்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டை அவர்களின் இரு மகன்களுக்கு தர வேண்டும். அந்த சொத்துக்களின் மீது இருவரும் பாதுகாவலராக இருக்க வேண்டும். அந்த வீட்டிலிருந்து வரும் வருமானத்தை குழந்தைகள் பெரியவர்களாக வரும்வரை இருவரும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை அவர்களின் உயர்கல்வி முடியும்வரை பிரபுதேவா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திர மாநிலம் கொண்டாப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டை இரு குழந்தைகளின் பெயருக்கு எழுதித் தர வேண்டும்.
இதற்கு இருவரும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்."
-இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி ஐ.பாண்டுரங்கன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி விசாரணையை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்தார்.
ஜூன் மாதம் இந்த வழக்கில் முறைப்படி விவாகரத்து வழங்கப்படும்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
(ரம்லத்)------ யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.
ReplyDelete