Thursday, December 30, 2010
வனிதாவை கைது செய்தே தீரவேண்டும்! - விஜயகுமார்
விமான நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்ததாக மகள் வனிதா மீது மீண்டும் புகார்தந்துள்ளார் நடிகர் விஜயகுமார். வனிதா மீது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி பரங்கிமலை புறநகர் போலீஸ் கமிஷனரிடம் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.
நடிகர் விஜயகுமார் தனது பேரன் விஜய் ஸ்ரீஹரியுடன் ஐதராபாத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சென்னை வந்தார். அப்போது அவருடைய மகளும் நடிகையுமான வனிதா, அவரது கணவர் ஆனந்தராஜ் ஆகியோர் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு சென்றனர். அங்கு விஜயகுமாரை வழி மறித்த வனிதா தனது மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்று வாக்குவாதம் செய்தார்.
ஆனால் விஜய்ஸ்ரீஹரியை ஒப்படைக்க விஜயகுமார் மறுத்து விட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விமான நிலையத்தில் தங்களை தாக்கியதாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் விமான நிலைய போலீசில் புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் தலையிட்டு சிறுவனை மீட்டு வனிதாவின் முதல்-கணவர் ஆகாஷின் தாயார் மகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர்
இந்த நிலையில் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் ஆகியோர் நேற்று மாலை 5.30 மணி அளவில் பரங்கிமலையில் உள்ள புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கமிஷனர் ஜாங்கிட்டிடம் விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். சுமார் 20 நிமிட நேரம் அவர்கள் சந்தித்து பேசினார்கள்.
இது குறித்து நடிகர் விஜயகுமார் கூறுகையில், "விமான நிலையத்தில் வனிதா அவரது கணவர் தாக்கியதில் ஏற்கனவே காயம்பட்ட எனது கையில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. சிறுவனை ஒப்படைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால் எப்படி? வீட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி என்னுடன் ஆகாஷ் அனுப்பி உள்ளார். வீட்டில் ஒப்படைக்கா விட்டால் என்னைத்தான் கேட்பார்.
நீதிமன்ற உத்தரவின் படி ஆகாஷ் தான் சிறுவனை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். மீனம்பாக்கம் விமான நிலைய சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரியிடம் விளக்கி கூறியுள்ளேன். நான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டேன். துணை கமிஷனரை சந்தித்து பேச சொன்னார். ஆனால் அவர் அங்கு இல்லை. மீண்டும் அவரை சந்தித்து என் புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்..."
பேரன் வளர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு இருக்கிறதே, அது தெரியுமா? என்று அவரிடம் கேள்வி எழுப்பினார் கமிஷனர். அதற்கு நான் தலையிடவில்லை, ஆனால் ஹைதராபாதிலிருந்து என்னுடன் அழைத்து வந்தேன், அவ்வளவுதான்", என்றார்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment