மாமனார் - மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் உருவான படத்தில் மருமகளாக நடித்த அந்த புதுமுக நடிகை மீது உதவி இயக்குனர்கள் சிலர் செம கடுப்பில் இருக்கிறார்களாம். சர்ச்சை படத்தை தொடர்ந்து வெளியான படம் ஹிட் ஆனதுடன், சியான் நடிகருடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்ததாலோ என்னவோ, சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்பவே பந்தாவாக இருக்கிறாராம். சூட்டிங்கின்போது ஒரு ஷாட் முடித்தும் உடனே ஓடிப்போய் கேரவனுக்குள் புகுந்து கொள்கிறாராம். உள்ளே போனால் போனதுதான் என்கிற ரீதியில், ஓய்வெடுக்கிறேன் என்று கூறி படுத்துக் கொள்ளும் அம்மணியை அடுத்த ஷாட்டுக்கு தயார் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம். பாவம்... உதவி டைரக்டர்கள்! ஒவ்வொரு ஷாட்டுக்கும் அம்மணி ஓ.கே. சொல்ல வைப்பதற்கு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment