Friday, December 31, 2010
2010 டாப் 10௦ பாடல்கள் எனது பார்வையில் பாகம் 1
2010-ல் வெளிவந்த படங்களில் இருந்து என்னை கவர்ந்த நான் ரசித்த பத்து பாடல்களை இங்கு வரிசை படுத்தி உள்ளேன். இரண்டு பாகங்களாக போடுகிறேன் இறுதி 5 இடங்களை பிடித்த பாடல்களை முதலில் பாப்போம்
10.நான் மகான் அல்ல
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இரண்டு பாடல்கள் கேட்கும் படியாக இருக்கும். அதில் "இறகை போலே பறக்குரேனே...." என்ற பாடலை யுவன் சங்கர் ராஜாவே பாடியும் இருந்தார் அந்த பாடல் எனது பார்வையில் 10-வது இடம்.
9.களவாணி
இந்தப்படம் சத்தமில்லாமல் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றி வகை சூடியது. பாடல்கள் சுமார் ராகம் தான். என்றாலும், இந்த படத்தில் வரும் "ஒரு முறை இரு முறை .." என்ற பாடல் நன்றாக இருந்தது. இந்த படலை S.S.குமரன் இசையமைத்து இருந்தார். ஹரிஸ்ராகவேந்த்ரா மற்றும் ஸ்ரீமதுமிதா , ஸ்ரீமதி ஆகியோர் இணைந்து பாடி இருந்தார்கள் இந்த பாடல் எனது பார்வையில் 9-வது இடம்.
8.பையா
இந்த படத்தில் மூன்று பாடல்கள் நன்றாக அமைந்து இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் " என் காதல் சொல்ல நேரமில்லை..." என்ற பாடலை யுவன் சந்கார் ராஜாவே பாடியும் இருந்தார் எந்த பாடல் 8-எனது பார்வையில் 8-வது இடம்
7.மைனா
இது ஒரு காதல் படம் இந்த படத்தின் பாடல்கள் கேட்கும் படியாக இருந்தது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் " மைனா, மைனா நெஞ்சுக்குள்ள...." என்ற பாடலை ஷானு பாடி இருந்தார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது இந்த பாடல் எனது பார்வையில் 7-வது இடம் .
6.எந்திரன்
அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா நடித்து வெளிவந்து, இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்திய சினிமாவை பற்றி பேச வைத்த படம். என்னும் பெருமையை தட்டி சென்றது. இந்த படத்திற்கு எ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்து சுமார் ராகம் தான். என்றாலும், இந்த படத்தில் வரும் "காதல் அணுக்கள் ..." பாடல் இசைப்ரியர்களால் ரசிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய் பிரகாஷ் மற்றும் ஷ்ரேயா கோஷல் இணைந்து பாடி இருந்தார்கள். இந்த பாடல் எனது பார்வையில் 6வதுஇடம் பெறுகிறது.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment