- Home
- ஆன்மீகம்
- செய்தி
- சினிமா
- தொழில்நுட்பம்
- வீடியோ
- பாடல்கள்
- ட்ரெய்லர்
Monday, December 27, 2010
தனுஷ் பட பெயர் மாறியது, இசையமைப்பாளரும் மாறினார் !
செல்வராகவன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் வெற்றிப் படைப்புகள் மறக்க முடியாதவை. அருமையான இசை விருந்து தந்த இந்தக் கூட்டணி, மன வேறுபாடுகளால் பிரிந்துகிடந்தது சிலகாலம்.
அந்த இடைவெளியை நிரப்ப ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக ஜிவி பிரகாஷ் குமாரை ஒப்பந்தம் செய்தார் செல்வா. படம் வெளிவந்து தோல்வியைத் தழுவியது. பாடல்களும் செல்வா - யுவன் ரேஞ்சுக்கு இல்லை என்ற விமர்சனம் வந்தது.
இப்போது தனுஷை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இந்தப் படத்துக்கு முதலில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இப்போது, இசையை யுவன் அமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுவலன் சங்கர் ராஜா கூறுகையில், மீண்டும் செல்வாவுடன் இணைவது மகிழ்ச்சியைத் தருகிறது..., என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தின் தலைப்பு இரண்டாம் உலகம் என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்வராகவன், யுவன் அபிமானிகளுக்கு இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மீண்டும் ஒரு 7 ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன், புதுப்பேட்டை இசை விருந்துக்கு இப்போதே காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்
Labels: சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment