சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகை வனிதா, அவரது முன்னாள் கணவர் ஆகாஷ், மகன் விஜய் ஸ்ரீஹரி ஆஜராகினர். விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் நடிகை வனிதா. இவருக்கும், நடிகர் ஆகாஷுக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்பது வயதில் விஜய் ஸ்ரீஹரி என்கிற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் இடையே பரஸ்பர விவாகரத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஆனந்தராஜன் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். வனிதாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையேயான குடும்பச் சண்டை, போலீஸ் நிலையம் வரை சென்றது. இருவரும் மாறி மாறி புகார் கொடுத்தனர். வனிதாவின் கணவர் ஆனந்தராஜனை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் விஜயகுமார் முன்ஜாமீன் பெற்றார். வனிதாவும் முன்ஜாமீன் பெற்றார்.
தன்வசம் இருந்த மகன் விஜய் ஸ்ரீஹரியை, நடிகர் ஆகாஷ் பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தன்னிடம் ஒப்படைக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச், இரண்டு வாரங்களில் விஜய் ஸ்ரீஹரியை வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, ஆகாஷுக்கு உத்தரவிட்டது. கடந்த வாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையில், தன்வசம் மகன் விஜய் ஸ்ரீஹரி இருப்பதில் வனிதா குறுக்கிடக் கூடாது எனக் கோரி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடிகர் ஆகாஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி மீனாட்சிசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் நடிகை வனிதா, நடிகர் ஆகாஷ், மகன் விஜய் ஸ்ரீஹரி ஆஜராகினர்.
சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து ஒரு மனுவை ஆகாஷ் தாக்கல் செய்தார். பின், வனிதா, "ஐகோர்ட் உத்தரவுப்படி 5ம் தேதிக்குள் மகனை ஒப்படைக்க வேண்டும். அவன் தேர்வு எழுதவில்லை என்றார்.
உடனே ஆகாஷ், "அவர்கள் வசம் இருக்க விஜய் ஸ்ரீஹரி விரும்பவில்லை என்றார். அதற்கு வனிதா, "இத்தனை ஆண்டுகள் என் வசம் தான் இருந்தான். இரண்டு வாரங்களில் அவனை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்றார். விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி மீனாட்சிசுந்தரம் தள்ளிவைத்தார்.

No comments:
Post a Comment