‘சினிமாவுக்கு வருவேன். திரைக்கு பின்னால்தான் பணியாற்றுவேன். நடிக்க மாட்டேன்’ என்று கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா கூறினார்.நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு இசை அமைத்ததுடன் ‘லக்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். ‘7ம் அறிவு’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவரது தங்கையும், கமலின் இரண்டாவது மகளுமான அக்ஷரா, நடனத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இதனையடுத்து 2 ஆண்டுகள் கழித்து பட டைரக்ஷனில் ஈடுபடப்போவதாக அக்ஷரா தெரிவித்துள்ளார். இவர் ஒரு இலங்கை வாலிபரை காதலிப்பதாகவும், அவருடன் பல இடங்களில் சுத்துவதாகவும் இணையத்தளங்களில் புகைப்படத்துடன் சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி பரப்பரப்பாக பேசப்பட்டார். எது எப்படியோ உலகநாயகனின் வாரிசுகள் என்ற பெயருடன் திரையுலகிற்கு வரும் இவர்கள், கமலின் பெயரை கெடுக்காமல் இருந்தால் சரி...
No comments:
Post a Comment