"மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, வலியுறுத்தி, சென்னை ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை வனிதா விஜயகுமார் நள்ளிரவில், ஐந்து மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜயகுமார் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, அவரது மகளும் நடிகையுமான வனிதா, ஏர்போர்ட் போலீசில் புகார் ஒன்றையும் கொடுத்தார்.
விஜயகுமாரும், வனிதாவின் குழந்தை விஜய் ஸ்ரீஹரியும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அப்போது, இரண்டாவது கணவர் ஆனந்தராஜனுடன் அங்கு வந்த வனிதா, விஜயகுமாரிடம் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்டார்; இதற்கு விஜயகுமார் மறுத்தார். விமான பயணிகளும், போலீசாரும் இருவரையும் விலக்கிவிட முயற்சித்தனர். விஜயகுமாரிடம் இருந்த ஸ்ரீஹரியை போலீசார் மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, இருதரப்பினரிடமும், ஏர்போர்ட் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் விசாரணை நடத்தினார். இதில், தன் கையை உடைத்துவிட்டதால், வனிதாவின் கணவர் ஆனந்தராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜயகுமாரும், "குழந்தையை எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தி வந்த விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; குழந்தையை உடனே என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, வனிதாவும் மாறிமாறி புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எவ்வித சமாதான பேச்சும் பலனளிக்காத நிலையில், விஜயகுமாரையும், குழந்தை ஸ்ரீஹரியையும் ஒரு அறையில் தங்க வைத்தனர். பின், வனிதாவை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு துவங்கிய சமாதானப் பேச்சுவார்த்தை, அதிகாலை 3 மணிவரை நீடித்தது. ஐந்து மணி நேரத்திற்கு பின், வனிதாவும், விஜயகுமாரும் அங்கிருந்து சென்றுவிட, குழந்தை ஸ்ரீஹரியை, வனிதாவின் முதல் கணவர் ஆகாஷின் தாய் மகேஸ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர். (ஸ்ரீஹரி, வனிதாவின் முதல் கணவர் மூலம் பிறந்தவன்.)
இது குறித்து நடிகை வனிதா அளித்த பேட்டி: என் மகனை என்னிடம் இருந்து பிரித்து நாசப்படுத்த சதி நடக்கிறது. என் குடும்பத்தில் பெரும்பாலும் இரண்டாவது, மூன்றாவதுக்கு மேல் யாரும் படிக்கவில்லை. என் குழந்தையையும் அந்த மாதிரியே சீரழித்துவிடலாம் என்று நினைக்கின்றனர். நான் இதற்கு அனுமதிக்க மாட்டேன். இப்பிரச்னை சம்பந்தமாக யாரையும் எதிர்கொள்ள தயார். என் குழந்தையை மீட்டே தீருவேன். குழந்தையின் பாஸ்போர்ட், என்னுடைய பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளேன். ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு நகலையும் கொடுத்துள்ளேன். என் மகன் விஷயத்தில் பெரிய சதி நடக்கிறது. இதை நான் இப்படியே விடப்போவதில்லை. கோர்ட்டிற்கு செல்வேன். விஜயகுமாரின் முன்ஜாமீனை ரத்து செய்வதற்கான வழியை மேற்கொண்டு, அவரை போலீசார் கைது செய்யும் வரை ஓயமாட்டேன். இவ்வாறு நடிகை வனிதா கூறினார்.
மறைந்திருந்து பார்த்த மர்மமென்ன? சென்னை விமான நிலைய போலீஸ் ஸ்டேஷனில் நேற்று விஜயகுமாருக்கும், அவர் மகள் நடிகை வனிதாவிற்கு இடையே பெரும் மோதல் வெடித்த போது, வனிதாவை, கணவர் ஆனந்தராஜன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்துச் சென்று சமரசம் செய்ய முயன்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு காரில், அருண் விஜயின் மாமனார், கொழுந்தியால் மறைந்திருப்பதாகவும், இங்கு நடக்கும் சம்பவங்களை அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் ஆனந்தராஜன் சப்தமாக கூறினார்.

இது குறித்து நடிகை வனிதா கூறுகையில், ""அவர்கள் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்னவோ? நான் பார்த்துவிட்ட பிறகு அருண்விஜயின் மாமனாரும், கொழுந்தியாளும் விமான நிலையத்தில் இருந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றுவிட்டனர். நாடு திரும்பியுள்ள அருண் விஜயையும் போலீசார் கைது செய்யவில்லை. எப்.ஐ.ஆர்., பதிவு செய்தும் என் தந்தையையும் போலீசார் கைது செய்யவில்லை. நாளை கோர்ட்டில், விஜயகுமாரின் முன்ஜாமீனை ரத்து செய்தாலும், அவரை போலீசார் கைது செய்யமாட்டார்கள். பின்னணியில் இருந்து யாரோ இந்த பிரச்னையில் போலீசாருக்கு "டைரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர், என்றார்.
No comments:
Post a Comment