எப்போது வேண்டும் என்றாலும் ஒட்டு மொத்த மானமுள்ள தமிழனும் எதிர்பார்க்கும் அந்த நிகழ்வு நடக்கலாம், என்ற சூழல் தமிழக அரசியல் அரங்கில் அரங்கேற தொடங்கி உள்ளது.. தி.மு.க வினர் எவ்வளவு தான் கூட்டணிக்காகவும் பதவியை தக்க வைத்து கொள்வதற்காகவும் காங்கிரசோடு மண்டியிட்டு போனாலும் காங்கிஸின் தி.மு.க வீரோத போக்கும், தி.மு.க. மீதான தாக்குதல் பேச்சுக்களும் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. சில நாட்களாக காங்கிரஸ் பேரியக்கத்தின் (என்ன பேரியக்கமோ எத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் இருகிறதா என்றே தெரியாத நிலைமை இதில பெரியக்கமாமே.) இளங்கோவன் தி.மு.கவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். "ஸ்டாலினால் முதல்வராக முடியாது அதற்கு நாங்கள் விட மாடோம்" , "இன்னும் திமுக வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்வி தான் " என்றெல்லாம் பேசி வருகிறார். இந்த நிலையில் இப்போது முதல் முறையாக திமுக தரப்பிலிருந்தும் பதில் சொல்ல ஆரம்பித்து இருகிறார்கள்.
அன்று அண்ணாவுக்குத் துரோகம் செய்தார் ஈ.வி.கே. சம்பத். இன்று எங்கேயோ காசு வாங்கிக் கொண்டு திமுக கூட்டணிக்குத் துரோகம் விளைவித்து வருகிறார் அவரது மகன் இளங்கோவன். இனியும் இளங்கோவன் உளறுவதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது திமுக.
திமுகவின் இந்த எச்சரிக்கை முதல்வர் கருணாநிதியின் தளபதிகளில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகத்தின் அறிக்கை மூலம் வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக பெரும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இளங்கோவன். மிகவும் பச்சை பச்சையாக அவர் திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும், கூட்டணியையும் விமர்சித்துப் பேசி வருகிறார். இருந்தாலும், கூட்டணி உடைந்து விடக் கூடாது என்பதற்காக இவற்றை பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால் தற்போது திமுகவின் பொறுமை கரையத் தொடங்கி விட்டதாக தெரிகிறது.
நேற்று வீரபாண்டி ஆறுமுகம் இளங்கோவனை கடுமையாக எச்சரித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், இளங்கோவனின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சுக்களையும், விமர்சனங்களையும் திமுக சகித்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம், கட்சித் தலைவமையின் உத்தரவு மட்டுமே காரணம். ஆனால் எங்களது அமைதியை இளங்கோவன் கோழைத்தனமாக கருதி விடக் கூடாது.
யாரோ கொடுக்கும் கூலியை வாங்கிக் கொண்டு கூச்சலிடுவது இளங்கோவனுக்கு பழக்கமான ஒன்றுதான்.
இளங்கோவனின் சமீபத்திய கருத்துக்கள், பேச்சுக்கள் அவரது கட்சி எடுத்துள்ள நிலைக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. இளங்கோவனின் தவறான அரசியல் பாதையின் பின்னணி, வரலாறு குறித்து காங்கிரஸ் தலைமைக்குத் தெரிந்திருக்காது என்று கருதுகிறேன். நீண்ட காலத்திற்கு முன்பு அவரது தந்தை ஈவிகே சம்பத், திமுக நிறுவனரான அண்ணாவுக்குத் துரோகம் இழைத்தார். திமுகவை அழிப்பேன் என்று சபதமிட்டார்.
இந்தப் பின்னணி கொண்ட இளங்கோவன் இனியும் திமுகவுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினால் அதற்கான கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அடுத்தமுறை இளங்கோவன் திமுகவை தேவையில்லாமல் விமர்சித்து எதையாவது உளறினால் அதற்கு தகுந்த பரிசை அவர் பெற வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் வீரபாண்டி ஆறுமுகம்.
திமுக தலைவரே இந்த கூட்டணிக்காக தானே எத்தனை, எத்தனை தம்மிழனின் உயிரை பறிப்பதை பஞ்சு மெத்தையில் படுத்து கொண்டு வேடிக்கை பார்த்தீங்கள், இந்த பதவிக்காக தானே ஒரு இனபடுகொலையே நிகழும்போது கண்டு கொள்ளாமல் இருந்தீர்கள். இப்பொது பார்த்தீர்களா அவர்கள் வேலை முடிந்ததும் (அதாங்க தமிழினத்தையே அளிக்க வேண்டும் என்று நினைத்தது தான் ) எப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று. நீங்களும் உங்கள் கட்சியும் தமிழ் , தமிழன் என்று சொல்லி தமிழுக்கும் தமிழனுக்கும் செய்த துரோகத்திற்கு தண்டனை அனுபவிக்கும் காலம் வர போகிறதா ...? வரட்டும் வரட்டும் இப்போது எங்கள் நேரம் (தமிழக மக்கள் நேரம் ) நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம் அடித்து கொள்ளுங்க. தமிழக மக்களே! இவர்கள் உங்களை தேடி வருவார்கள். நான் தவறு செய்து விட்டேன் மன்னித்து கொள்ளுங்கள். என்று நீலி கண்ணீர் வடிப்பார்கள் நம்பி விடாதீர்கள். உங்களுக்கு இன்று பதவி போனால் நாளை வரும். ஆனால், நீங்கள் எத்தனை தண்டனை பெற்றாலும் இழந்த என் தமிழனின் உயிர் வந்து விடுமா.....? இழந்த சந்தோசங்கள் திரும்புமா...........? குமுறும் எங்கள் இதயம் தான் அடங்குமா ......?
No comments:
Post a Comment