யதார்த்த சினிமாக்களை வரவேற்கு ரசிகர்களுக்காக தா படம் மீண்டும் ரீலிஸ் செய்யப்படுகிறது. கடந்த 3ம்தேதி ரீலிஸ் ஆன இந்த படத்தை நாடோடிகள் படத்தின் இணை இயக்குனராக பணியாற்றிய ஆர்.கே.சூர்ய பிரபாகர் இயக்கியிருந்தார். புதுமுகங்கள் ஸ்ரீஹரியும், நிஷாவும் நாயகன் - நாயகியாக நடித்திருந்தனர். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் சிறந்த படம் என்ற பெரும் வரவேற்பை பெற்றது. ஆயிலும் படம் ரீலிஸ் ஆன வாரத்தில் கனமழை பெய்ததாலும், அடுத்தடுத்து புதிய திரைப்படங்கள் வெளியானதாலும் திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடுவது நிறுத்தப்பட்டது. தியேட்டர்க்காரர்கள் இரண்டாவது வாரமும் தா படத்தை திரையிட தயாராக இருந்தும் சிலபல காரணங்களால் படம் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது.
இந்நிலையில், தா படத்தை மீண்டும் ரீலிஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறார். அதன்படி ஸ்ரேயா பிலிம்ஸ் பட நிறுவனம் தா படத்தை மீண்டும் அடுத்த மாதம் ரீலிஸ் செய்யவிருக்கிறது. படத்தில் இடம்பெற்றிருந்த வீடியோ கிராபர் சம்பந்தப்பட்ட காட்சியொன்று வீடியோகிராபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நீக்கப்பட்டு விட்டது என்பது கூடுதல் தகவல்.

ஆனால், மீண்டும் அந்த வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே . காரணம் ஏற்கனவே வெளியாகி, பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டு, விமர்சனங்கள் எழுதப்பட்ட ஒரு படத்திற்கு மீண்டும் பத்திரிகைகள் எப்படி பாராட்டுவார்கள், ஒரு படத்திற்கு எப்படி இரண்டு தடவை விமர்சனம் எழுத முடியும். என்பது போற கேள்விகளும் எழுகிறது. "தா" தாகம் தீர்க்குமா? அல்லது திரையரங்குகளில் இருந்து தாவுமா ? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment