எழுத்தாளர் சாருநிவேதிதாவும், டைரக்டர் மிஷ்கினும் ஒரு கோப்பையில் இரண்டு ஐஸ் க்யூப்கள் என்பது சராசரி சினிமா ரசிகர்களும் அறிந்த விஷயம்தான். இந்த நட்பு கோப்பையை உடைத்து தள்ளுகிற அளவுக்கு குதித்து கும்மாளம் போட்டுவிட்டார்கள் இருவரும். பிறகென்ன? வழக்கம் போல தன் 'போட்டுக் கொடுக்கிற' வேலையை ஆரம்பித்துவிட்டார் சாருவும்! உன்னை பற்றி எனக்கு தெரியாதா என்று சாரு போட்டுக் கொடுத்திருக்கும் தகவல்கள் மிஷ்கினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.
அப்படியென்ன பிரச்சனை இருவருக்குள்ளும்? மிஷ்கின் இயக்கிவரும் 'யுத்தம் செய்' படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு ஆடவும் செய்திருக்கிறார் இந்த சாரு. அப்படிப்பட்ட நட்பை வெட்டித் தள்ளுகிற அளவுக்கு அமைந்தது அந்த புத்தக வெளியீட்டு விழா. சாருநிவேதிதா எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்த மிஷ்கின், "இந்த நாவல் மட்டமான சரோஜாதேவி நாவலுக்கு இணையானது" என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். அங்கு துவங்கியது இந்த (செய்)வினை!
அதை தொடர்ந்து தனது வலைமனையில் மிஷ்கினுக்கு ஆறுகால பூஜை நடத்த ஆரம்பித்திருக்கிறார் சாரு. அதன் ஒரு பகுதியை மட்டும் உங்களுக்கு வழங்குகிறோம் .
மிஷ்கின் தனியாக வாழ்பவர். அது மட்டும் அல்லாமல் பிரபலமாகவும் இருப்பதால்
அவருடைய அந்தரங்க வாழ்க்கை எப்போதுமே ஊடகங்களின் வெளிச்சத்திலேயே இருக்கும். அதனால்தான் நியூசிலாந்து சென்ற போது மேட்டர் பண்ணினாயா என்று கேட்டேன். இது ஒரு மனிதனின் மேல் நான் கொண்ட அதீதமான அன்பினாலும், வாத்சல்யத்தினாலும் கேட்ட கேள்வி. என் சொந்த மகனாகவே இருந்தாலும் அவன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தால் “செக்ஸுக்கு என்ன செய்கிறாய் மகனே?” என்றுதான் கேட்பேன். அண்டார்க்டிகாவில் வாழும் ஒரு மனிதனைப் பார்த்து “நீங்கள் உணவுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்பதில்லையா, அது போல. ஆனால் மிஷ்கின்தான் ஒரு இலக்கியப் படைப்பையே சரோஜாதேவி புத்தகமாகப் பார்க்கக் கூடியவர் ஆயிற்றே? அதனால்தான் அவருக்கு நான் அப்படிக் கேட்டது ஏதோ ஆபாசமான விஷயமாகத் தோன்றியிருக்கிறது. அப்படித் தோன்றுவதில் தவறு இல்லை. ஒருவன் முட்டாளாக இருப்பது அவனுடைய தவறா என்ன? அதை நட்டநடு சபையில் குழந்தைகளும் கூடியிருந்த சபையில் சொன்னது மன்னிக்க முடியாத குற்றம்.
சரி, நான் ஒன்று சொல்கிறேன். மிஷ்கின் ஒருமுறை சொன்னது அல்ல; நூறு முறை சொன்னது. அதுவும் என்னிடம் தனியாகச் சொன்னது அல்ல. மனுஷ்ய புத்திரன் போன்ற நண்பர்களின் முன்னால் சொன்னது. கமலோடு அவர் ஒரு படம் பண்ணுவதாக இருந்தது அல்லவா? அது பப்படமாகப் போய் விட்டதற்கு மிஷ்கின் சொன்ன காரணம், இந்த உலகத்திலேயே அபாசமானதும் அருவருப்பானதும் ஆகும். அதை நான் வெளியே சொன்னால், மிஷ்கின் சினிமா உலகத்திலிருந்து அல்ல; தமிழ்நாட்டிலிருந்தே துரத்தப்படுவார். அவ்வளவு ஆபாசமான காமெண்ட் அது. அதே காமெண்ட்டை அவர் பல முறை பல நண்பர்களின் எதிரில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அடுத்து இளையராஜா. என் எழுத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். கமலையும் இளையராஜாவயும் பற்றி எவ்வளவோ விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அதைப் போல் பத்து இருபது மடங்கு என்னிடம் அவர்களைப் பற்றி விமர்சித்தவர் மிஷ்கின். இளையராஜாவை இவர் பார்க்கப் போனாராம். மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். தண்ணீர் தாகம் தாங்க முடியாமல் இளையராஜா குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலைக் கேட்ட போது ”இது என் தண்ணீர்” என்று சொல்லி இளையராஜா பாட்டிலைக் கொடுக்க மறுத்து விட்டாராம். இதுபோல் ஒரு ஆயிரம் விஷயங்கள். அதையெல்லாம் சொல்லி நான் இளையராஜாவையோ கமலையோ அசிங்கப்படுத்த மாட்டேன். உண்மை எனக்கு இப்போதுதான் புரிகிறது. வீட்டுக்கு வந்த நபருக்கு மூன்று மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல், தண்ணீர் கேட்ட போதும் மறுக்கின்ற ஒருவராக இளையராஜாவைப் பற்றி மிஷ்கின் சித்தரித்தது பொய் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது
என்னைப் பற்றி மிஷ்கின் பொதுமேடையில் சாரு ஒரு குடிகாரன், ஸ்த்ரீலோலன், அவனுடைய நாவல் ஒரு சரோஜாதேவி புத்தகம் என்று அவதூறு சொன்னதைப் போல்தான் அவர் இளையராஜா பற்றி அவதூறு செய்திருப்பார் என்று இப்போது நான் புரிந்து கொள்கிறேன். மிஷ்கினுக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்க வேண்டும். அவர் ஏதாவது ஒரு ஸைக்கியாட்ரிஸ்டை உடனடியாகச் சந்திப்பது அவருடைய எதிர்கால வாழ்வுக்கு நல்லது. உதவி இயக்குனர்களைப் பற்றி அவர் சொன்னதையும் இங்கே நான் நினைவு படுத்துகிறேன். “உதவி இயக்குனர்களுக்கு கை அடிப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது.” இது மிஷ்கின். இப்படிச் சொல்லிவிட்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சொன்ன உதாரணத்தை கவனியுங்கள். அதே மனநிலையோடுதான் அவர் என்னையும் என் நாவலையும் பார்த்திருக்கிறார். உதவி இயக்குனர்கள் இல்லாவிட்டால் இன்றைய தமிழ் சினிமா இருக்க முடியுமா? இன்றைக்கு இருக்கும் எல்லா பெரிய இயக்குனர்களுமே உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள்தானே, மிஷ்கின் உட்பட?
ஒருநாள் மிஷ்கினைப் பார்த்து விட்டு வந்தார் பிச்சாவரம் சீனிவாசன். அப்போது அவர் என்னிடம் ”இப்போதுதான் வாழ்வில் முதல்முறையாக ஒரு ஆளுக்கு 15 பேர் உணவு பரிமாறுவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னார். இதெல்லாம் சினிமா இயக்குனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆடம்பரம். சினிமா உலகில்தான் இப்படி ஒவ்வொருவரும் அந்தக் காலத்து சுல்தான்களைப் போல் வாழ்வதைப் பார்க்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும்தான் இந்த சொகுசு வாழ்க்கை. மற்ற தொழிலாளர்கள் எல்லாம் 50 அடி உயர க்ரேனில்தான் தொங்க வேண்டும்; நடிப்பதற்கு வேண்டிய விளக்குகளைப் பிடித்துக் கொண்டு.
15 பேர் உணவு பரிமாறும் திமிரில்தான் மிஷ்கின் அப்படி அந்த விழாவில் பேசி விட்டார் என்று நினைக்கிறேன். மேலும், அவருக்கு நட்பு என்றால் என்னவென்று தெரியாது என்று தோன்றுகிறது. அவர் இளையராஜாவையும், ஓவியர் மருதுவையும் பார்த்தால் அவர்களின் பாதம் தொட்டு வணங்குவார். நான் வயதிலும் அனுபவத்திலும் மருதுவுக்கும் சீனியர். ஆக, மிஷ்கின் என்னுடைய பாதம் தொட்டு வணங்க வேண்டியவர். ஆனால் நமக்குத்தான் இது போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் எல்லாம் பிடிக்காதே? அதனால்தான் வா மிஷ்கின் என்று சொல்லி அவர் தோளில் கை போட்டு, அவரும் என் தோளில் கை போட அனுமதித்தேன். ஆனால் அவரோ அப்படி நான் அனுமதித்ததாலேயே என்னை அவருடைய உதவி இயக்குனர் என்று நினைத்து விட்டார். அவரால் ஒருவரின் காலில் விழ முடியும்; அல்லது, அவரை உதவி இயக்குனராக நினக்க முடியும். இந்த இரண்டுதான் சாத்தியம். இதுதான் ஒரு சராசரித் தமிழனின் குணம். ஒன்று, காலில் விழுவேன். இல்லாவிட்டால், உன்னை என் காலில் போட்டு மிதிப்பேன். சமமாகப் பழகவே தெரியாத கலாச்சாரம் இது. இதைத்தான் மிஷ்கின் தன்னோடு பழகும் எல்லா எழுத்தாளர்களோடும் செயல்படுத்துகிறார்.
No comments:
Post a Comment