இணைய உலாவித் தொகுப்புகளில் டேப்கள் பயன்பாடு கூடுதல் வசதியைத் தருவதால், அந்த வசதியை மற்ற பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் தரும் வகையில் அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டேப்கள் பயன்பாட்டுடன், நோட்பேட் தொகுப்பு ஒன்று இப்போது கிடைக்கிறது. என்னைப் போல, அடிக்கடி நோட்பேட் பயன்படுத்துபவர்களுக்கு, இது மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால், மிகக் குறைந்த வசதிகளுடன் கூடிய வேர்ட் ப்ராசசர்தான் நோட்பேட். அதில் அதிக வசதிகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், அடிக்கடி இந்த சில வசதிகள் இருக்கக் கூடாதா என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்தும்போது நமக்கு வரும். அந்த வகையில் இந்த புதிய நோட்பேட் தொகுப்பு நமக்கு ஓரளவிற்கு நிறைவைத் தருகிறது. இதன் பெயர் Caderno.
இதில் பல டேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரிகளின் எண்கள் காட்டப்படுகின்றன. INI, XML, HTML, CSS, JavaScript, PHP மற்றும் Java போன்ற புரோகிராமிங் மொழிகளுக்கென இவற்றைப் பயன்படுத்துகையில், இதன் சொற்கள் மற்றும் கட்டளைகளைத் தனியே ஹைலைட் செய்து காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு, நோட்பேட் கிராஷ் ஆனால், இதிலிருந்து மீண்டு வரும் வசதியும் இதில் உண்டு. யூனிகோட் எழுத்து வகைகளுக்கு சப்போர்ட் உள்ளது. டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்கையில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் வசதி கிடைக்கிறது. எனவே இதனை எளிமையான முறையில் சாதாரண நோட்பேடாகவும், தேவைகளுக்கேற்ப கூடுதல் வசதிகளுடனும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துகையில் நமக்கு பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தும் அனுபவம் கிட்டுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த புரோகிராமினை இந்த இணையத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம்செய்து பயன்படுத்தலாம். பைலின் பெயர் caderno 2.10.1 Setup.exe. டவுண்லோட் செய்கையில் மூன்றுவித பைல்கள் தரப்படுகின்றன. அவை Normal, Portable மற்றும் U3.நம் தேவைக்கேற்ற பதிப்பினை எடுத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment