இங்கிலாந்து- ஆஸ்திரேலியா இடையே ஆசஸ் கோப்பை டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 280 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 644 ரன்கள் குவித்தது. அடுத்து 2-வது இன் னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா நேற்று ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து இருந்தது. ஸ்மித் 24 ரன்களுடனும், சிடில் 17 ரன்களுடனும் இருந்தனர். கடைசி நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது.
சிடில் 43 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹிஸ் மன்ஹால், 7 ரன்களிலும் பீர் 2 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதன் மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 281 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 54 ரன்களுடன் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற வெற்றி கணக்கில் இங்கிலாந்து ஆசஸ் கோப்பையை கைப்பற்றியது. கடந்த ஆசஸ் கோப்பை போட்டியிலும் இங்கிலாந்துதான் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த வெற்றி மூலம் கோப்பையை மீண்டும் தக்க வைத்து உள்ளது.
ஆஸ்திரேலிய மண்ணில் 24 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து ஆசஸ் கோப்பையை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment