புகழ் பெற்ற சபரிமலை அய்யப்ப சுவாமி கோவிலில்நேற்று மாலை மகர விளக்கு பூஜை நடந்தது. இந்த மகரஜோதி தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
மகரஜோதியை பார்த்து விட்டு பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வாகனங்களில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள், மகரவிளக்கை பார்த்து விட்டு வண்டி பெரியாறு நோக்கி ஒரு லாரியில் திரும்பி கொண்டிருந்தனர்.
புல்லுமேடு அருகே இரவு அந்த லாரி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது மோதி சுமார் 400 அடி பள்ளத்துக்குள் லாரி பாய்ந்தது.
இதனால் லாரியுடன் அதில் இருந்த பக்தர்கள் பள்ளத்தில் விழுந்தனர். லாரி இடித்து தள்ளியதால் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பக்தர்களும் பள்ளத்துக்குள் விழுந்தார்கள். இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து மற்றும் நெரிசலில் சிக்கி 85 பக்தர்கள் பலியானார்கள்.
தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு வரை 75 உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...
ReplyDeleteபாவம் செய்த பலனோ.... கடவுளைத் தேடிப் போனால் ஆரத்தழுவிக் கொண்டாருங்க
பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+
கடவுளை நம்பிதானே அத்தனை கூட்டமும். நம்பிக்கையில் தானே விரதம்.நம்பிக்கையில் தானே எல்லா கஷ்டமும்.நம்பிக்கையில் தானே கடவுளை நாடினோம்.கடவுளுக்கு பக்தரிடம் அத்தனை பிரியமா? தன்னுடன் அழைத்து கொண்டாரே?தவறு பக்தனிடமா? கடவுளிடமா?
ReplyDelete