ராணுவ ரகசிய ஆவணங்களை பெற விக்கி லீக் இணையதளம் லஞ்சம் கொடுத்ததாக பிடிபட்ட ராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை விக்கி லீக் இணைய தளம் வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் பாதுகாப்பான ஆவணங்கள் விக்கி லீக் கையில் கிடைத்தது குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணை நடத்தியது.
இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ உளவுத்துறையில் பணிபுரியும் பிராட்லி மேன்னிங் (23) என்பவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள குவான்டிகோ நகரைச் சேர்ந்தவர். இவர் ஈராக்கில் உள்ள பணியில் ஈடுபட்டு வந்தார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை கடந்த ஜூலை மாதம் முதல் நடத்தப்பட்டது. அப்போது, ராணுவ ரகசிய ஆவணங்களை பெற விக்கி லீக் நிறுவனம் ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது.
இந்த பணம் ராணுவ வீரர்கள் நலநிதிக்காக பெறப்பட்டது. பணத்தை பெற்றுக்கொண்ட பிராட்லி மேன்னிங் ராணுவ ரகசியங்களை விக்கி லீக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இந்த விவரங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக விக்கி லீக் இணைய தள நிறுவனர் அசாங்கேயின் வங்கி கணக்குகளை அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது. இருந்தும் அசாங்கேவுக்கு ரகசியமாக பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது.
இது குறித்து புலனாய்வு துறையினர் துப்பு துலக்கிய போது அவருக்கு பணஉதவி செய்தது பிராட்லி மேன்னிங் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராணுவ ரகசிய ஆவணங்களை திருடி விற்ற குற்றத்துக்காக பிராட்லி மேன்னிங்குக்கு 52 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment