இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி ஐ.பி.எ.ல். போட்டிகளில் கொல்கத்தா அணி கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் வருகிற ஐ.பி.எல். போட்டியில் அவரை கொல்கத்தா அணி தேர்வு செய்யவில்லை.
அதுமட்டும் அல்ல. மற்ற அணிகளும் கூட அவரை ஏலம் எடுக்க வில்லை. இது கொல்கத்தா வீரர்களை கொந்தளிக்க செய்தது. கங்குலி இல்லாமல் கொல்கத்தா அணியா? என்று கொந்தளித்த அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து கொல்கத்தா அணி உரிமையாளர் நடிகர் ஷாருக்கான், கங்குலி இல் லாமல் கொல்கத்தா அணி இல்லை என்று கூறினார். கங்குலியை கொல்கத்தா அணி நிர்வாகியாக சேர்க்க முயற்சித்தார். ஆனால் இதற்கு கங்குலி சம்மதிக்கவில்லை.
கொல்கத்தா அணி நிர்வாகியாகவோ அல்லது வீரராகவோ இடம் பெற மாட்டேன் என கூறி விட்டார். இந்த நிலையில் கொச்சி அணி கங்குலியை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.
இதற்காக கங்குலியிடம் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இது சம்பந்தமாக கொச்சி அணி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ஒருவர் கூறும் போது கங்குலியை சேர்த்துக் கொள்ள கிரிக்கெட் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்காது. மற்ற அணிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் நாங்கள் கங்குலியை சேர்த்து கொள்வோம்.
இதற்கு விதி முறைகளும் விதி விலக்கு அளிக்கும் என கருதுகிறோம் என்றார். ஆனால் கங்குலி என்ன மன நிலையில் இருக்கிறார்? என்று தெரியவில்லை. அவர் கொச்சி அணியில் ஆட சம்மதிப்பாரா? அல்லது மறுத்து விடுவாரா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.
No comments:
Post a Comment