பொங்கல் பண்டிகை சனிக்கிழமை வந்ததால் ஆண்களுக்கு ஆகாது என்று கூறி சென்னை புறநகர்களில் வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சனிக்கிழமையன்று வந்தது. இதையடுத்து தற்போது ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. சனிக்கிழமையன்று பொங்கல் வந்ததால் அது வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆகாது. சனிக்கிழமை கரி நாள் என்பதால் அன்றைய தினம் பொங்கல் பண்டிகை வந்தது வீட்டுக்கு ஆகாது என்று கூறி வதந்தி கிளம்பியுள்ளது.
இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளனரோ அதற்கேற்ற எண்ணிக்கையில் வீட்டு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும் என்று வதந்தி பரப்புவோர் கூறி வருகின்றனர்.
இந்த வதந்தி சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் படு வேகமாகப் பரவி வருகிறது. குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த வதந்தி காட்டுத் தீ போல பரவி வருவதால் பெண்கள் குழப்பமடைந்துள்ளனர்.
கடந்த 2005ம் ஆண்டும் இதேபோல கரி நாளில் புத்தாண்டு பிறந்ததால் அது வீட்டுக்கு நல்லதில்லை என்று கூறி வீடுகளுக்கு முன்பு பச்சரிசியைப் பரப்பி அதில் விளக்கேற்றி வைத்தனர் பெண்கள். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை வைத்து வதந்தி கிளப்பி விட்டுள்ளனர்.
இப்படி சொல்கிறவர்களை யாரா இருந்தாலும் சரி, கையில் கிடைப்பதை எடுத்துகொண்டு அடிக்கலாம்.
ReplyDeleteஏந்தான் இப்படி புதுப்,புது வதந்திகளைப்பரப்புகிரார்களோ?
ReplyDelete@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...
@Lakshmi
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி அம்மா...