நித்யானந்தா சாமியாருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்று வெளியான வீடி யோவால் நடிகை ரஞ்சிதா பரபரப்பாக பேசப்பட்டார். பல மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர் தற்போது கோர்ட்டில் ஆஜராகி வீடியோ சி.டி.யை வெளியிட்ட லெனின் கருப்பன் மீது புகார் அளித்துள்ளார். பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்து வருகிறார். வீடியோ பட சர்ச்சையால் நித்யானந்தாவை விட்டு ரஞ்சிதா விலகி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் அவருக்கு பாத பூஜை செய்து நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.
இதுபற்றி ரஞ்சிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நித்யானந்தா தொடர்பை நான் முறிக்கவில்லை. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு இருப்பேன். வீடியோ சி.டி. என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள். கடவுள் நம்பிக்கையும் இருந்தது. நான் எந்த தப்பும் செய்ய வில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.
வீடியோ படம் பொய்யாக தயாரிக்கப்பட்டது. கட்டுக் கதை. வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. இதை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட வேண்டும். இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில் அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என் குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியமாய்பட்டது. மக்கள் என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.
ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை நம்புகிறார்கள். பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும் நம்புகிறார்கள். சினிமாவில் மீண்டும் நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய நோக்கம்.
சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார்.
No comments:
Post a Comment