நீ வெறும் நூர் இல்ல. கோகினூர்" என்றாராம் கவிச்சித்தர் வாலி! "உம்மை என்னவோன்னு நினைச்சேன். நீர் ஏழைகளின் ஏ.ஆர்.ரஹ்மானய்யா" என்றாராம் கவிப்பேரரசு வைரமுத்து. இப்படி கவியுலக மாமேதைகளையும் கவர்ந்திருப்பது யார் தெரியுமா? வம்சம் படத்தில் அறிமுகமாகி சுமார் அரை டஜன் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தாஜ்நூர்!
கம்பன் வீட்டு கட்டுத்தறி என்பார்கள் அனுபவசாலிகளிடம் பணியாற்றியவர்களை. தாஜ்நூரும் அப்படிதான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 15 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது இவருக்கு. "நான் வெளியில் வந்து இசையமைக்க ஆரம்பிச்சிட்டேன். இருந்தாலும் சார் சென்னைக்கு வந்தா " நூர்... வந்திட்டு போங்க" என்பார். அவர் என் மேல் வச்சுருக்கிற அன்பும் பாசமும் அப்படியேதான் இருக்கு. அதே உரிமையோட இப்பவும் அவர் படத்தின் வேலைகளை செய்ய அழைப்பார். அதுதான் எனக்கு பெருமையா இருக்கு" என்று ரஹ்மான் பற்றி நெகிழ நெகிழ பேசுகிறார் தாஜ்நூர்.
"ரஹ்மான் சார் ஸ்கூலில்தான் நான் ட்ரெய்னிங் எடுத்துகிட்டேன் என்றாலும் நான் வேற மாதிரி ஸ்டைலில் பயணம் பண்ணனும்னு நினைக்கிறேன். என் முதல் படமான வம்சம் படத்தின் பாடல்கள் தயாரானதும் ரஹ்மான் சாரோட பேமிலிக்குதான் முதலில் போட்டுக் காட்டினேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நல்லாயிருக்குன்னு வாயார பாராட்டினாங்க. கடைசியாக ஒரு சின்ன வெட்கத்தோடும் தயக்கத்தோடும் ரஹ்மான் சாரிடம் போட்டு காட்டினேன். கேட்டுட்டு ரொம்ப பாராட்டினார். அதுமட்டுமில்ல, ' தாஜ்நூர் பெரிய ஆளா வந்திருவாரு போலிருக்கு. இனிமே நாம நினைச்ச நேரத்துக்கு அவரை கூப்பிட முடியுமான்னு தெரியலையே'ன்னாரு சிரிச்சுக்கிட்டே"
"நான் இப்போ இசைமைச்சிருக்கிற 'எத்தன்' பட பாடல்களையும் இன்னும் பல பாடல்களையும் நிறைய பேர் பாராட்டுறாங்க. ஆனால் ரஹ்மான் சாரோட மனம் திறந்த அந்த பாராட்டுகளைதான் நான் பொக்கிஷமா நினைக்கிறேன்" என்று குருநாதரின் அண்மையை விட்டு விலகி வரவே முடியாமல் பேசுகிறார் தாஜ்நூர்.
இவருக்கு முதலில் வெளிவந்த படம் வம்சம். ஆனால் அதற்கு முன்பே கமிட் ஆன படம் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி. இதை சேரனின் உதவியாளர் ஷண்முகராஜ் இயக்கியிருக்கிறார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும்போதே என்னை வந்து சந்திச்சவர் இவர். ஒரு பாடல் உருவாகி அது டைரக்டர் கைக்கு போன பின்பு நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்வார்கள் இசையமைப்பாளர்கள். ஆனா ஷண்முகராஜ் விஷயத்தில நானும் சரி, அவரும் சரி, அப்படியில்லை. இது படமாவதை கூட நான் ஆர்வமா கவனித்தேன். அவரும் என்னிடம் வெரிகுட் வாங்கணும்னு நினைச்சார்.
"படமும் பாட்டும் பட்டைய கிளப்பும் பாருங்க" என்ற தாஜ்நூர், 'எத்தன்' படத்தின் ஸாங் மிக்சிங்கை அமெரிக்காவில் நடத்தினாராம். ச்சும்மாவா.... ரஹ்மானின் வளர்ப்பாச்சே!
No comments:
Post a Comment