தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி நாளை மறுநாள் (28ம் தேதி) அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
மாநகராட்சி ரிப்பன் மாளிகை பொன்விழா அரங்கில் நடந்த முதல் நாள் பயிற்சியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், 2வது நாளான நேற்று திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிறைவு நாளான இன்று காலை திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பயிற்சி அளித்தார். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள், ‘தேர்தல் எப்போது நடக்கும், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்’ என்று கேட்டனர்.
இதற்கு பிரவீன்குமார், “தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி பிப்ரவரி 28ல் (நாளை மறுநாள்) அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும். எந்த நேரத்தில் தேர்தலை நடத்தினாலும் அதைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்” என்று பதிலளித்தார்.
No comments:
Post a Comment