கோவில் அர்ச்சகர்கள் கதையை மையமாக வைத்து “சிவசிவா” என்ற படம் தயாராகியுள்ளது. சிவாஷ் இயக்கியுள்ளார். நாயகர்களாக குமரன் கார்த்திக், சிவாஷ் ஆகியோரும் நாயகிகளாக சுகானி, நட்சத்திராவும் நடித்துள்ளனர்.
இந்த படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தில் காஞ்சீபுரம் கோவில் செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகள் இடம் பெற்று இருந்ததற்கு தணிக்கை குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த வசனங்களை நீக்கிவிட்டு “யு” சான்றிதழ் அளித்துள்ளனர்.
இதுபற்றி இயக்குனர் சிவாஷ் கூறியதாவது:-
நாம் சாமி என்று கடவுளையும் கோவில் குருக்களையும்தான் ஒப்பிடுகிறோம். அந்த குருக்களே தப்பாக நடந்து கொள்ளும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. காதல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதுவே குருக்களுக்கு வந்தால் சமுதாயம் எப்படி பாதிக்கப்படும் என்பதை காட்சிபடுத்தியுள்ளோம்.
கலைஞர் பராசக்தியில் வசனம் எழுதும்போது அவை சரியா? தவறா? என்ற விவாதங்கள் நடந்தன. தற்போது நடந்த சம்பவத்தில் இருந்து கருவை பிடித்து படம் எடுத்துள்ளேன். இப்படத்தில் அர்ச்சகர் “தேவநாதன்” பற்றி இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்து நீக்கிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment