திருப்பதி வெங்கடாசலபதியை தனது குடும்பத்தினருடன் தரிசிக்க வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னைச் சந்திக்க வந்த பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள் என யாரிடமும் பேச மறுத்து விட்டார். கடும் கோப முகத்துடன் அவர் காணப்பட்டார்.
தமிழக அரசியல் குழப்பங்களில் ஒன்றாக தேமுதிக மாறியுள்ளது. கூட்டணி வைக்க முடிவு செய்து விட்ட அந்தக் கட்சி யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. அதேசமயம் அதிமுகவுடன் பலமான பேரத்தில் அது ஈடுபட்டு வந்தது, வருகிறது. அதேபோல காங்கிரஸுடனும் அது ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
மக்களுடன் மட்டுமே கூட்டணி, தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வந்த விஜயகாந்த், மற்ற அரசியல் கட்சிகளைப் போலதானும் தடம் மாறி விட்டார் என்ற போதிலும், இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இழுபறியாகவே இருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று தனது உறவினர்களுடன் திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார் விஜயகாந்த். கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர் வெளியே வந்த விஜயகாந்த்தை ஏராளமான ரசிகர்கள் அணுகினர். இதைப் பார்த்து விஜயகாந்த் டென்ஷனாகி விட்டார்.
அதேபோல அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடமும் அவர் சரிவரப் பேசவில்லை. கோபம் கலந்த முகத்துடனேயே அவர் காணப்பட்டார்.
யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறீர்கள் அல்லது சிரஞ்சீவி பாணியில் கட்சியைக் கலைத்து விடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, கோபமடைந்த விஜயகாந்த், அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது. கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. முடிந்த பிறகு சொல்வேன் என்று கூறி விட்டு வேகமாக கிளம்பி விட்டார்.
(இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)

இதையும் படியுங்களேன்.....
No comments:
Post a Comment