பிரியங்கா சோப்ரா நடித்துள்ள 7 கூன் மாப் இந்திப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிரியங்கா படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி பேசினார். பின்னர் அங்கு திரண்டு நின்ற ரசிகர்களை பார்த்து தன்னிடம் கேள்வி கேட்கலாம் என்றார். இதனால் பலர் போட்டி போட்டு கேள்விகள் கேட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் பிரியங்கா சோப்ராவை ஆத்திரமூட்டுவது போல் கேள்விகள் கேட்டார்.
நீ பஞ்சாபி தானே! என்று கேட்டார் பிரியங்கா ஆமாம் என்றார். பஞ்சாபில் பிறந்த நீ பஞ்சாபியார்களுக்கும் பஞ்சாப் மொழிக்கும் எதுவும் செய்யவில்லை என்று ரசிகர் ஆவேசமாக கத்தினார்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
ரசிகரின் பேச்சு பிரியங்கா சோப்ராவையும் ஆத்திரமூட்டியது. நான் கோபமாகி விட்டேன். வெளியே போய் விடு என்று ரசிகரை பார்த்து திட்டினார். திடீரென்று அந்த ரசிகர் மாயமானார்.
பிரியங்கா தந்தை பஞ்சாபி. தாய் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரியங்கா பிறந்து வளர்ந்ததெல்லாம் உத்தரபிரதேச மாநிலத்தில். ரசிகர் கோபமூட்டிய கேள்விகளால் எரிச்சலான பிரியங்கா சோப்ரா நிகழ்ச்சியை வேகமாக முடித்து விட்டு வெளியேறினார்.
No comments:
Post a Comment