தமிழ் ரசிகர்களின் மனதில் பட்டாபோட்டு குடியேறியிருக்கும் டாப்ஸிக்கு கோலிவுட்டை விட பாலிவுட் வாய்ப்புகள்தான் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. தமிழில் வந்தான் வென்றான் படத்தில் நடித்து வரும் டாப்ஸிக்கு கடந்த மாதம் அமிதாப்புடன் நடிக்க ஒரு வாய்ப்பு வாயிற் கதவை தட்டியது. கால்ஷீட் சொதப்பல் ஆகிவிடக்கூடாது என கருதிய அம்மணி, அமிதாப் படத்தையே மறுத்து விட்டார். இதனிடையே தெலுங்கு திரையுலகமும் டாப்ஸிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் வந்திருக்கிறது பாலிவுட் வாய்ப்பு. மும்பையிலிருக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான டேவிட் டவான் என்பவர்தான் டாப்ஸியை அழைத்திருக்கிறாராம். முழு நீள காமெடி படம் என்பதாலும், பெரிய இயக்குனர் என்பதாலும் ஓ.கே சொல்லியிருக்கிறார் டாப்ஸி. மேலும் டாப்ஸியின் அழகில் மயங்கிய சில டைரக்டர்களும் டாப்ஸிக்கு வலைவிரித்திருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment