தமிழ் திரையுலகில் கதை பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைகளை உருவாக்கும் கதாசிரியர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அழுத்தமான கதைகளை உருவாக்கும் இயக்குனர் சேரன் போன்றோர் நடிக்கப் போய் விட்டனர். புதுமுக இயக்குனர்கள் எடுக்கும் படங்களில் வலுவான கதைகள் இல்லை. பெரிய ஹீரோக்கள் பிற மொழிகளில் ஹிட்டான படங்களை ரீமேக் செய்து நடிக்கவே பிரியப்படுகின்றனர்.
சமீபத்தில் கார்த்தி நடித்து ரிலீசான `சிறுத்தை' படம் தெலுங்கில் ரவிதேஜா நடித்த `விக்கிரமாகுரு' என்ற படத்தின் ரீமேக் ஆகும். விஜய் நடித்து பொங்கலுக்கு ரிலீசான `காவலன்' படம் மலை யாளத்தில் ஹிட்டான `பாடிகார்ட்' படத்தின் ரீமேக் ஆகும். தனுஷ் நடிக்க சுப்பிரமணிய சிவா இயக்கி வரும் `சீடன்' படம் மலையாளத்தில் வந்த `நந்தனம்' படத்தின் ரீமேக். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவாவை வைத்து `நண்பன்' என்ற படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார்.
இது இந்தியில் அமீர்கான், மாதவன் நடித்து வெற்றிகரமாக ஓடிய `3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் விஜய்யை வைத்து ஜெயம் ராஜா இயக்கி வரும் `வேலாயுதம்' படத்தின் கதை தெலுங்கில் நாகார்ஜுனா நடித்து ரிலீசான `ஆசாத்' படத்தை தழுவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு, பரத் நடிக்கும் `வானம்' படமும் தெலுங்கு ரீமேக். மேலும் 15-க்கும் மேற்பட்ட பிறமொழி படங்களின் கதை உரிமைகளை தமிழ் தயாரிப்பாளர்கள் வாங்கி வைத்துள்ளனர். அவற்றை ரீமேக் செய்யும் பணி விறு விறுப்பாக நடக்கிறது.
No comments:
Post a Comment