2011-12 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் இதன் விபரம் வருமாறு : நாட்டின் உணவு பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது; வேளாண்மை துறை தேவைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது; நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 % ஆக உள்ளது; பொருளாதார நெருக்கடியும் சரி செய்யப்படும்; விவசாய துறையும் 5.4% வளர்ச்சி பெற்றுள்ளது; தொழில்துறை 8.1%, சேவை துறை 9.6 % வளர்ச்சி பெற்றுள்ளது; அரசு துறை வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.6000 கோடி நிதி வழங்க அனுமதி வழங்கப்படும்; மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்; வேளாண் துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்; கைத்தறி நெசவாளர்களுக்கு நபார்டு வங்கிளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; புதிய திட்டங்களின் மூலம் 3 லட்சம் நெசவாளர்கள் பயன் பெறுவர்; விவசாயத்தை மேம்படுத்த கூடுதலாக ரூ.7860 கோடி ஒதுக்கீடு; வேளாண்துறையில் தனியார் முதலீடுகளை அதிகப்படுத்த புதிய திட்டங்கள்; உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த உணவு பதப்படும் திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்; நாட்டின் மேற்கு பகுதியில் பசுமை புரட்சியை அதிகரிக்க கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு; குறிப்பிட்ட தேதிக்குள் கடன்களை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடனில் 3 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்; எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களுக்கு வரி விலக்கு; வீட்டு கடன் தொலை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்; விவசாயிகளுக்கு கூடுதல் கடன் திட்டங்கள்; உணவு பாதுகாப்பு மசோதா இவ்வாண்டு முதல் அமல்படுத்தப்படும்; பாரத் நிர்மாண் திட்டங்களுக்கு ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கல்வி திட்டங்கள் 24 % அதிகரிக்கப்படும்; பொதுத்துறை திட்டங்களும் அதிகரிக்கப்படும்; 9 மற்றும் 10ம் வகுப்பு பயிலும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பு தொகை அதிகப்படுத்தப்படும்; கல்வித்துறைக்கு ரூ.52 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்க 5 அம்ச திட்டம் அறிமுகம்; சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; கிராமப்புற தொலைத்தொடர்பு திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு; பிபிஎல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வயது வரம்பு தளர்த்தப்படும்; நதிகளை சுத்தம் செய்ய சிறப்பு நிதி ஒதுக்கீடு; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.1500 லிருந்து ரூ.3000 ஆக உயர்வு; முதியோர் ஓய்வூதிய வயது வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைப்பு; பழங்குடி மக்களுக்கான நிதி ரூ.244 கோடியாக அதிகரிப்பு; புதிய நீதிமன்ற கட்டிடங்களுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும்; இலக்கிய துறைகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு; 80 வயதிற்கு மேற்பட்ட ஏழைகளுக்கு ஓய்வூதிய தொகை ரூ.500 உயர்வு; நக்சலைட்டு பாதிப்புகளுக்கு உள்ளான பகுதிகளின் மேம்பாட்டிற்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு; புதிய உர கொள்ளை திட்டங்கள் அறிமுகம்; தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.1.8 லட்சமாக உயர்வு; மூத்த குடிமக்கள் தகுதி பெறுவதற்கான வயது வரம்பு ரூ.60 ஆக குறைப்பு; சேவை வரி மற்றும் சுங்க வரியில் மாற்றம் இல்லை; உள்ளூர் மற்றும் வெளியூர் பயணத்திற்கான சேவை வரி 10% அதிகரிப்பு; உணவு மற்றும் எரிபொருட்களுக்கான சுங்க வரி நீடிக்கும்; அடிப்படை சுங்க வரி 5% உயர்வு; பெண்களுக்கான புதிய வரிவிலக்கு ஏதும் இல்லை; விமான பயணத்திற்கான சேவை வரி உயர்வு;
No comments:
Post a Comment