ஒரு முழுப்படத்தின் படப்பிடிப்பையும் அதிகபட்சம் மூன்று மாதத்திற்குள் முடிக்கும் இயக்குநர்களும் உண்டு, மூன்று வருடங்களில் முடிக்கும் இயக்குநர்களும் உண்டு. இதில் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்தான் இயக்குநர் கண்ணன். ஆனால் இவரே படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளுக்காக ஆறு மாதங்களாக காத்திருந்திருக்கிறார்.
'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை' ஆகியப் படங்களைத் தொடர்ந்து கண்ணன் இயக்கும் மூன்றாவது படம் 'வந்தான் வென்றான்'. ஜீவா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் கதைகளம் சென்னை, மும்பை என்பதால் மும்பையில் படப்பிடிப்பி நடத்த முடிவு செய்தார் இயக்குநர். அதுவும் தாஜ் ஹோட்டல், கேட் வேய் ஆப் இந்தியா போன்ற மும்பையின் முக்கிய பகுதிகளிலும் இப்படத்தின் காட்சிகளை படமாக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்த இரண்டு இடங்களிலும் படப்பிடிப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே, இந்த படத்தின் கதையை தயார் செய்த கண்ணன், அப்போது படத்தின் காட்சிகள் எந்த எந்த பகுதிகளில் படமாக்கப்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்துவிட்டாராம். அதனால் எப்படியும் இந்த இரண்டு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியே தீருவேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார்.
அதன்படி படம் பற்றியும் கதை பற்றியும் காட்சிகள் பற்றியும் எழுத்து மூலமாக விவரங்கள் கொடுத்து, எப்படியோ அரசிடம் படப்பிடிப்பிற்கு அனுமதி பெற்றியிருக்கிறார். மேலும் துப்பாக்கி வெடிப்பது, வெடிகுண்டு வெடிப்பது, போன்ற காட்சிகள் எடுக்கக்கூடாது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் படப்பிடிப்புக் குழுவினர் அனைவருக்கும் அடையாள அட்டை, முகவரிச் சான்று தர வேண்டும் என்று அரசு நிபந்தனைகள் விதித்திருக்கிறது. அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்த இயக்குநர், அனைத்து ஆதாரங்களையும் அரசிடம் கொடுத்திருக்கிறார். அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னரே படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்திருக்கிறார்கள்.
இந்த நடைமுறைகள் முடிய ஆறுமாதங்கள் ஆகிவிட்டதாம். இப்படி ஆறுமாதங்கள் காத்திருந்து, அந்த இடத்தில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
No comments:
Post a Comment