உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 11-வது லீக் ஆட்டம் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைப்பெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ஷேவாக்கும், சச்சினும் களம் இறங்கினர். இருவரும் ஆரம்பத்தில் அதிரடியாக விளையா வந்தனர். ஷேவாக் தனது வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
8-வது ஓவரை பிரெஸ்னென் வீசினார். அந்த ஓவரில் ஷேவாக் பிரையரிடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 26 பந்துகளை சந்தித்து 35 ரன் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்த வந்த காம்பீர் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில சச்சின் நிதானமாக விளையாடினார். 15 ஓவர் வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்தது. நிதானமாக விளையாடி வந்த சச்சின் 50 ரன்னை தொட்டார்.
அதன் பின் சச்சின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26-வது ஓவரை சுவான் வீசினார். அந்த ஓவரில் சச்சின் தொடர்சியாக 2 சிக்சர்களை விளாசினார். சச்சினை தொடர்ந்து காம்பீரும் அரை சதம் அடித்தார். அரை சதம் அடித்த சிறிதுநேரத்தில் காம்பீர் 51 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் களம் வந்த யுவராஜ் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் விளையாடிய சச்சின் சதம் அடித்தார். இது இவருக்கு 47-வது சதமாகும். இன்றைய ஆட்டத்தில் சச்சின் பேட்டிங்கில் அனல் பறந்தது. 39-வது ஓவரில் சச்சின் 120 எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதில் 10 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த டோனி பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் யுவராஜ் சிங் அரைசதம் அடித்தார்.
அதன்பின் 58 ரன்னில் அவுட் ஆனார். பின் தோனி 31 ரன்னில் அவுட் ஆனார். இதற்கிடையே இந்தியா 45.3 ஓவரில் 300 ரன்னைக் கடந்தது. இதன் பின் இந்தியா விக்கெட் சரிய ஆரம்பித்தது. 49.5 ஓவரில் 338 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பதான் (14), கோலி (8), ஹர்பஜன் சிங் (0), ஜாகீர்கான் (4), சாவ்லா (2) ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து தரப்பில் பிரெஸ்னென் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் பின்னர் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
No comments:
Post a Comment