ஒவ்வொரு சிலைக்கு பின்பும் ஒரு வரலாறு இருக்கிறது. காலப்போக்கில் வரலாறு மறைந்து போய் சிலைக்கும் சென்ட்டிமென்ட் பார்க்க ஆரம்பித்தது அரசியல். மெரீனாவில் இருந்த கண்ணகி சிலை ஒரே நாள் இரவில் இடம் பெயர்ந்ததும், பின் ஆட்சி மாறிய பின் அதே இடத்திற்கு ஷிப்ட் ஆனதும் கூட வரலாற்று குறிப்புகளில் இடம் பெற வேண்டிய சென்ட்டிமென்ட்தான்!
எம்ஜிஆர் மறைவின் போது உடைக்கப்பட்ட கலைஞரின் சிலை மீண்டும் அந்த இடத்தில் நிறுவப்படும் என்று தி.க.தலைவர் வீரமணி சொன்னாலும், இதை முக்கியமான சிலர் விரும்பவில்லை. ஏனென்றால் அந்த சிலை வந்தபின்புதான் மீண்டும் ஆட்சிக்கே வர முடிந்தது என்ற நம்பிக்கைதானாம்.
தமிழகத்தை சுற்றி இப்படி சென்ட்மென்ட்டுகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்க, ரஜினி செய்யும் ஒரு காரியமும் சென்ட்டிமென்ட் அடிப்படையில் இருக்குமோ என்று சிந்திக்க வைத்திருக்கிறது ரசிகர்களை. வேறொன்றுமில்லை. தன்னை சந்திக்க வரும் முக்கியமான விவிஐபிகளுக்கு தனது சிலையையே பரிசாக அளித்து அனுப்புகிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்த கையடக்க சிலை ராஜாதி ராஜா படத்தில் வருகிற ரஜினி போல அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
பரிசு கொடுக்கிற விஷயத்திலும் அவர் ராஜாதி ராஜாதான்!
No comments:
Post a Comment