தமிழக முதல்வர் கருணாநிதியின் சரித்திர நாவலான 'பொன்னர் சங்கர்', நடிகர் பிரசாந்த் இரு வேடங்களில் நடிக்க படமாக்கப்பட்டு வருகிறது.
பிரசாந்தின் தந்தை தியாகராஜனின் லக்ஷ்மி சாந்தி மூவிஸ் இப்படத்தை தயாரிக்கிறது. பொன்னர் - சங்கர் என இரண்டு வேடங்களில் பிரசாந்த் நடிக்கிறார்.
2009ம் ஆண்டின் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜா சோப்ராவும், 2008ம் ஆண்டின் இந்திய அழகி போட்டியில் இரண்டாவதாக வந்த திவ்யா பரமேஷ்வரனும் இப்படத்தின் நாயகியாக அறிமுகமாகிறார்கள்.
பிரசாந்துக்கு அப்பாவாக ஜெய்ராம், அம்மாவாக குஷ்பு, தங்கையாக சினேகா, தலையூர் காளிமன்னனாக நெப்போலியன், மற்றும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், நாசர், விஜயகுமார், பொன்வண்ணன், வடிவேலு, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.
இப்படத்தில் வரும் போர்க் காட்சிகளுக்கு 500க்கும் மேற்பட்ட போர் வீரர்கள் கலந்து கொள்ளும் காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னை, மும்பை, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களிலிருந்து பல கிராமிய பண்டைக்கால இசைக் கருவிகளும், 2000க்கும் மேற்பட்ட தென்னந்திய பண்பாட்டு கலைஞர்களும் கலந்து கொண்ட பாடல்காட்சிகள் 25 நாட்களுக்கும் மேல் படமாக்கபட்டுள்ளது.
மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படத்தை தியாகராஜன் தயாரிப்பதோடு டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 600 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை தத்ரூபமாக நினைவுக்கு கொண்டுவரும் அளவுக்கு மொத்த படத்திற்கும் ஏராளமான செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இத்திரைப்படம் இதற்கு முன்பு வந்த சரித்திர படங்களை விட முன் மாதிரியாக இப்படம் அமைய வேண்டும் என்கிற முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்கிறது படக்குழு.
No comments:
Post a Comment