எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் க்ளைமாக்சில் வந்து சுபம் போடும் போலீஸ் மாதிரி, மிஷ்கினுக்கு வருகிற பிரச்சனைகளும் கடைசியில் சுபத்தோடு முடிவதுதான் விசேஷம். யுத்தம் செய் படத்திற்கு பிறகு லிங்குசாமியும் இவரும் இணைந்து உருவாக்கவிருந்த படம் கைவிட பட்டதாக தகவல் பரவிக்கிடக்கிறது. அதை உறுதி செய்கிற விதத்தில் இவருக்காக ஆர்யா கொடுத்திருந்த தேதிகளை அதே லிங்குசாமி தயாரிப்பில் படம் இயக்கவிருக்கும் பிரபு சாலமனுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார்களாம்.
ஆனால் மிஷ்கின் சொன்ன கதையில் மனதை பறி கொடுத்த ஆர்யா, லிங்குசாமி தயாரிக்கலைன்னா பரவாயில்லை. வேறொரு தயாரிப்பாளரோட வாங்க. உங்களுக்கு என் கால்ஷீட் எப்பவும் தயாரா இருக்கு என்று கூறியிருக்கிறாராம்.
பல்லுக்கு நடுவில உரிக்காத பலாப்பழத்தை செருகிய மாதிரி ரொம்ம்ம்ம்ம்ப சிரமம் கொடுக்கிற விஷயம் ஒன்றும் இருக்கிறது இந்த பட விஷயத்தில். ஆர்யா கால்ஷீட் கொடுக்க முன் வந்தாலும் மிஷ்கின் வைத்திருக்கும் பட்ஜெட் 35 கோடியாம்.
இவ்வளவு பெரிய பட்ஜெட் ஆர்யா-மிஷ்கின் கூட்டுக்கு தாங்குமா என்று கால்குலேஷனில் இறங்கியிருக்கிறார்களாம் மிஷ்கின் அணுகும் தயாரிப்பாளர்கள்!
No comments:
Post a Comment