போன் வந்தால் கூட பதறுகிறார் ஓவியா. காரணம் காதுக்கு வேலை கொடுப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதாம் அவருக்கு. இந்த அவஸ்தைக்கு பின்னணியில் இருப்பது பெரிய்ய்ய்ய்ய்ய 'டமால்' ஒன்றுதான்!
அகராதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக மோனிகாவும் நடித்திருக்கிறார். இருந்தாலும் மன்மதன் அம்பு மாதிரி ஓவியாவை ஏமாற்றாமல் பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கிறாராம் இப்படத்தின் டைரக்டர் நாகா வெங்கடேஷ். ஏனென்றால் ஓவியா முதலில் நடிக்க ஒப்பந்தமான படமும் இதுதான். அப்புறம்தான் வந்தது களவாணி.
படத்தில் ஒரு காட்சியில் வெடிகுண்டு வெடிப்பது போலவும், அதிலிருந்து ஓவியா தப்பித்து ஓடுவது போலவும் படமாக்கினார் நாகா வெங்கடேஷ். அப்போது ஏற்பட்ட சத்தத்தில் அவரது வலது காது பாதிக்கப்பட்டு விட்டதாம். போன் வந்தால் கூட இடது காதில் வைத்துதான் பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுல்ல, சில நாட்களாக காது மருத்துவரிடமும் சிகிச்சை எடுத்து வருகிறார்.
வன்முறை காட்சிகள் மனசை மட்டுமல்ல, காதையும் பாதிக்கும் என்கிறார் ஓவியா!
No comments:
Post a Comment