அடுத்து த்ரில்லர் படம் இல்லை... ஒரு மெல்லிய, இசையுடன் கூடிய காதலை படமாக்கப் போகிறேன், என்கிறார் கவுதம் மேனன்.
நடுநிசி நாய்கள் என்ற சைக்கோ படத்தை குறைந்த செலவில் தயாரித்த, ஏகத்துக்கும் லாபம் பார்த்துள்ளார் கவுதம் மேனன். படம் குறித்து அதிர்ச்சியும் வேதனையும் கலந்து விமர்சனங்கள் வந்தாலும், முதல் சில நாட்களிலேயே போட்ட காசை எடுத்துவிட்டார்களாம். முதல் வார முடிவில் விநியோகஸ்தர் ஷேராக ரூ 1.10 கோடி கிடைத்துள்ளது இந்தப் படம் மூலம்.
இந்த தெம்போடு அடுத்த தமிழ்ப் படத்தை ஆரம்பிக்கிறார் கவுதம் மேனன். ஜூலையில் துவங்கும் இந்தப் படத்தில் அநேகமாக சூர்யா நடிக்கக் கூடும் என்கிறார்கள். ஹீரோயின் எமி ஜாக்ஸன். மதராஸபட்டனம் புகழ் அதே எமிதான்.
அநேகமாக இந்தப் படம் அவர் நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு வந்த சென்னையில் ஒரு மழைக்காலமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன் பிறகு அடுத்து தனது இந்திப் படத்தை ஆரம்பிக்கிறார் கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக் இது. த்ரிஷா வேடத்தில், எமி ஜாக்ஸனே நடிக்கிறார்.
பிரதீக் பாபர், ஓமி வைத்யா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான்தான் இசை. பாடல்கள் ஏற்கெனவே தயாராக உள்ளதால், நேராக படப்பிடிப்புக்குச் செல்கிறாராம் கவுதம் மேனன்.

No comments:
Post a Comment