ஆக்ஷனும் காமெடியும் கைகூடும் ஹீரோக்களுக்குதான் இன்றைய கோடம்பாக்கத்தில் கொட்டுமேள சப்தம்! சமீபகாலமாக அந்த ஸ்டைலை சரியாக பிடித்து சாமர்த்தியமாக சவாரி பண்ணிக் கொண்டிருப்பவர் கார்த்தி மட்டுமே! கண்ணா... லட்டு திங்க ஆசையா என்று அதிர்ஷ்டம் இனிப்பு மேல் இனிப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறது பிரதருக்கு. இந்த நேரத்தில் குழப்பமும் கூடவே வந்து கும்மியடிக்கிறதாம்.
சமீபத்தில் யு டிவி நிறுவனத்திற்கு ஒரு கதை சொன்னாராம் 'ராமன் தேடிய சீதை' படத்தின் இயக்குனர் ஜெகன். இவர் சேரனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர். யு டிவிக்கு போவதற்கு முன்பே கார்த்தியிடம் ஒரு கதை சொன்னாராம். அது சிரிக்க சிரிக்க பின்னியெடுப்பது மாதிரியான ஆக்ஷன் வித் காமெடி!
முதலில் கால்ஷீட் தரவும் சம்மதித்தாராம் கார்த்தி. நம்பிக்கையோடு யு டிவிக்கு போன ஜெகன், கதையை அவர்களுக்கு பிடித்த மாதிரி சொன்னதுடன், கார்த்தி கால்ஷீட்டும் தருவார் என்று கூறினாராம் நம்பிக்கையோடு. அந்த நம்பிக்கையை அதே தினத்தில் காலி பண்ணிவிட்டாராம் கார்த்தி. இப்பதான் ஒரு காமெடி படத்தில் நடிச்சேன். அடுத்த படமும் அதே மாதிரி இருந்தா சரிப்படாது. நான் வேற மாதிரி ஒரு படத்தில் நடிச்சிட்டு அப்புறம் சொல்றேன் என்றாராம்.
குறிஞ்சி பூவேன்னு கொஞ்ச போனா, நெருஞ்சி முள்ளேன்னு நெஞ்சுல தைக்குதாம் விதி
No comments:
Post a Comment