திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி நடக்கிறது.
இதுபற்றி சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராஜா ஆகிய மூவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
அவர்கள் கூறுகையில், "திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ந் தேதி காலை 10-30 மணிக்கு தொடங்கி, இரவு 11 மணிவரை நடக்கிறது.
விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்-பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், டைரக்டர்கள், நடிகர்-நடிகைகள் கலந்துகொள்வார்கள். நட்சத்திர கலைநிகழ்ச்சிகளுடன், இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல் ஜீ.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.
எம்.கே.டி.தியாகராஜபாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்ற மூத்த நடிகர்களின் பாடல்களுடன் இன்றைய நடிகர்களின் பாடல்களும் பாடப்படும். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா போன்ற மூத்த பாடகர்-பாடகிகள் முதல் இளைய தலைமுறை பாடகர்-பாடகிகளும் கலந்துகொள்கிறார்கள்.
இதையொட்டி 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும்,'' என்றனர்.

No comments:
Post a Comment