2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment