போர் குற்றவாளி ராஜ பக்சேவை தண்டிக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. போர் குற்றவாளி ராஜபக் சேவை கூண்டில் ஏற்ற தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். அதனை வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி. மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளேன்.
இப்பொழுதும் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வுகளும், சமுதாய இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், வணிகத் தொழில் நிறுவனங்களும் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த முன் வர வேண்டும். சாதி, மத, இன, கட்சி பேதங்களை மறந்து 7 கோடி தமிழர்களும் தமிழர்களாகவே எழுவதற்கும் தமிழினத்தை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவை தண்டிப்பதற்கும் இதுவே தருணமாகும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment