ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ரசிகர்கள் மருத்துவமனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அவர்களை அங்கு இருக்கும் போலீசார் சமாதானம் செய்து ஊருக்கு அனுப்பி வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வதந்தி பரவி வருவதால் மருத்துவமனை தரப்பு ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
இது போலவே எம்.ஜி.ஆர். அமெரிக்கா, புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது தமிழ்நாட்டில் பதற்றம் கிளம்பியது. அதனைத் தவிர்ப்பதற்காக வீடியோ ஷூட் செய்து, அந்தக் காட்சிகளை தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பினார்கள்.
ரஜினி உடல்நலம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஜினியை பேச வைத்து வீடியோ எடுத்து அதில் மருத்துவமனை சம்பந்தபட்ட டாகடர்களும் பேச வைக்கலாம் என்று முடிவு எடுத்தார்களாம்.
இதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்து நேற்று இரவு அதற்கான வீடியோ காட்சிகள் எடுத்து விட்டார்களாம். எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிந்தவுடன் அதை அனைத்து சேனல்களுக்கும் கொடுக்க இருக்கிறார்களாம்.
தற்போது வருத்தத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தவே இந்த திட்டமாம். அதுமட்டுமல்லாது குணமடைந்தவுடன் ரசிகர்களையும், பத்திரிக்கையாளர்களையும் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறாராம் ரஜினி.

No comments:
Post a Comment