மாஜி கதாநாயகி ரேவதி, அவ்வப்போது அக்கா, அம்மா கேரக்டரில் தலை காட்டி வந்ததையும் சமீபகாலமாக தவிர்த்து வந்தார். சற்று பெரிய இடைவெளிக்குப்பின் தற்போது எஸ்.டி.ஆர்., அலைஸ் சிம்புவுக்கு அம்மாவாக "ஒஸ்தி" படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க இருக்கும் ரேவதி அதுபற்றி இவ்வாறு கூறுகிறார் எவ்வாறு...?
ரொம்ப நாள் ஆச்சு தமிழ் படங்களில் நடித்து... ஒரு சீன் பண்ணினாலும் அதை செய்யுற நமக்கும், பார்க்கிற ரசிகர்களுக்கும் அது இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்க வேண்டும் என்பதால் தான் இத்தனை நாள். "ஒஸ்தி" படத்தில் போலீஸ் ஆபிஸர் சிம்புவுக்கு அம்மா என்றாலும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இன்ட்ரஸ்டிங் கேரக்டர் என்றார்.
"கிழக்கு வாசல்", படத்தில் ரேவதி மேடம் நடித்தபோது, அந்த படத்தில் நான் ஆர்.வி.உதயகுமாரிடம் அஸிஸ்டண்டாக பணிபுரிந்தேன். அந்த நட்பு இன்று என் படத்தில் ரேவதி என்கிறார், "தில்", "தூள்", "கில்லி", "குருவி" படங்களைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்குப்பின் "ஒஸ்தி" படத்தை இயக்கும் தரணி!

No comments:
Post a Comment