டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் கனிமொழி இன்று ஆஜரானார்.
இன்று காலை, நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியபோது, உடல்நிலை சரியில்லாததால் தன்னை மதியம் வரை, நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனியிடம் கனிமொழி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கனிமொழியின் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் மதியம் 2 மணிக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது கணவர் அரவிந்தனும் உடன் வந்தார்.
அவரது ஜாமீன் மனு குறித்து முடிவு அறிவிக்கப்படும் வரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

என்ன நடக்குது... ஏன் ஜாமீன் வழங்க மறுக்கிறார்கள்.. ? இதிலும் அரசியல் தானா?
ReplyDelete