இலங்கை ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச் செல்வனின் மனைவி சசிரேகாவும் 2 குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகம் செய்து, சிங்களர்களுடன் கைகோர்த்த கருணா, ரகசிய இடங்களைக் காட்டி கொடுத்ததால், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சிங்கள ராணுவம் எளிதாக குண்டு வீசி கொன்றது.
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், ரகசிய இடம் ஒன்றில் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். கருணா கொடுத்த தகவலின்பேரில் அந்த இடத்தில் சிங்கள ராணுவம் குண்டு வீசியது. இந்த தாக்குதலில் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.
2009ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி கட்ட போர் உக்கிரமாக நடந்த போது சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகாவும், அவரது இரண்டு குழந்தைகளும் மக்களோடு மக்களாக கலந்திருந்தனர். வவுனியா அகதிகள் முகாமில் அவர்கள் தஞ்சம் அடைந்தபோது சிங்கள ராணுவம் சசிரேகாவை கைது செய்தது.
கடந்த சில மாதங்களாக சசிரேகாவை தனி இடத்தில் வைத்து சிங்கள ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவர் பற்றி வேறு எந்த தகவலும் தெரியாமல் இருந்தது. சசிரேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் சசிரேகாவையும் 2 குழந்தைகளையும் விடுலை செய்துவிட்டதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் சசிரேகா விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment