மேற்குவங்காள மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி கரக்பூரில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதற்காக நடிகர் சிரஞ்சீவி புரூலியாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரக்பூருக்கு சென்றார்.
ஹெலிகாப்டர் புறப்பட்ட நிலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர் மேலே பறக்க முடியாமல் திணறியது. இதனால் நடிகர் சிரஞ்சீவி சென்ற ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமடித்தது.
இந்த நிலையில் ஹெலிகாப்டரின் எரிபொருள் குறைவதை உணர்ந்த விமானி, உடனடியாக ஹெலிகாப்டரை கொல்கத்தாவில் அவசர அவசரமாக தரையிறக்கினார். பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய நடிகர் சிரஞ்சீவி ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்து விட்டு, கார் மூலம் கரக்பூர் புறப்பட்டு சென்றார்.

No comments:
Post a Comment